சென்னை விமான நிலையத்தில் புதிதாக ஆறு அடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் ரூபாய் 250 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கார் பார்க்கிங்கில் 2,150 வாகனங்கள் ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். அதிநவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களும் இங்கு நிறுத்தலாம். அதற்கு சார்ஜ் ஏற்றுவதற்கான கருவிகளும், கார் பார்க்கிங்கிள் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய அதிநவீன கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வருவதை ஒட்டி, தற்போது பயன்பாட்டில் இருக்கும் தரைதள பழைய கார் பார்க்கிங், சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் மூடப்படுகிறது. அதன் பின்பு பழைய கார் பார்க்கிங்கில் கார்கள் நிறுத்த அனுமதி இல்லை. இந்த மல்டி லெவல் ஆறு அடுக்கு புதிய கார் பார்த்திங்கள் தான், உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்களுக்கு வரும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட வேண்டும் என்று விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கு இடையே புதிய கார் பார்க்கிங்கில் கட்டணம் விகிதங்களையும்அறிவித்துள்ளனர். ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் இருசக்கர வாகனங்கள், முதல் 30 நிமிடங்கள் நிறுத்துவதற்கு ரூபாய் 20. அதற்கு மேல் இரண்டு மணி நேரம் வரை நிறுத்துவதற்கு 2 மணி நேரம் வரை நிறுத்துவதற்கு ரூபாய் 25. தற்போதைய புதிய மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் இரு சக்கர வாகனங்கள் 30 நிமிடங்கள் வரை நிறுத்துவதற்கு அதே 20 ரூபாய் தான். ஆனால் இரண்டு மணி நேரம் வரை நிறுத்தினால் ரூபாய் 30. அதை போல் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை நிறுத்தி இருந்தால் ரூபாய் 90.
கார்களுக்கு 30 நிமிடத்திற்கு தற்போது, ரூபாய் 40 வசூலிக்கப்படுகிறது.இனிமேல் புதிய கார் பார்க்கிங்கில் 30 நிமிடங்களுக்கு ரூபாய் 75. ஏற்கனவே உள்ள பழைய கார் பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் வரை நிறுத்துவதற்கு ரூபாய் 100. இனிமேல் புதிய கார் பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் வரை நிறுத்துவதற்கு ரூபாய் 150. மேலும் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை கார்கள் நிறுத்தி இருந்தால் ரூபாய் 500.
வேன், டெம்போக்களுக்கு தற்போதைய பார்க்கிங்கில், 30 நிமிடங்களுக்கு ரூபாய் 40. ஆனால் புதிய பார்க்கிங்கில் 30 நிமிடங்களுக்கு ரூபாய் 300. மேலும் 2 மணி நேரம் வரை நிறுத்தினால் பழைய பார்க்கிங்கில், ரூபாய் 110.புதிய பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் வரை நிறுத்தினால் ரூபாய் 300. மேலும் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை நிறுத்தினால் ரூபாய் 1,000. பஸ், டிரக்குகளுக்கு ஏற்கனவே உள்ள பார்க்கிங்கில் 30 நிமிடம் வரை நிறுத்தினால் ரூபாய் 50. தற்போதைய புதிய பார்க்கிங்கில் ரூபாய் 600. பழைய பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் வரை நிறுத்தினால் ரூபாய் 110. புதிய பார்க்கிங்கில் ரூபாய் இரண்டு மணி நேரம் நிறுத்தினால் ரூபாய் 600. மேலும் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை நிறுத்தினால், ரூபாய் 2,000. இவ்வாறு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண விகிதங்கள் வரும் ஞாயிறு நான்காம் தேதி அதிகாலை 12 மணி ஒரு நிமிடத்தில் இருந்து அமுலுக்கு வந்தது அதோடு அதிநவீன மல்டி லெவல் ஆர் அடுக்கு கார் பார்க் கிங் பயன்பாட்டுக்கு வந்தது உள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.