காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ. அன்பரசன் வெளியிட்டுள்ளார். மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு வார்டுகளில் போட்டியிடும், திமுக வேட்பாளர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 115 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலில், கூட்டணி கட்சியினருக்கும் வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.



 

காஞ்சிபுரம்  மாவட்டம்  திமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் விவரம், 

 

மாவட்ட ஊராட்சி குழு - காஞ்சிபுரம் 

 

வார்டு 3 - பா ராமமூர்த்தி, குன்னம்

வார்டு-4 எஸ் .பாலா என்கிற பால்ராஜ், மொளச்சூர்

வார்டு 5 v.ஹரி ,நந்தம்பாக்கம்

வார்டு 6 படப்பை, மனோகரன்.

வார்டு  7 மதிமுகவிற்கு ஒதுக்கீடு

 

ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள்

 

குன்றத்தூர்  ஒன்றியம்

 

வார்டு - 1 எம் .வாசுகி, வார்டு - 2 அன்பு, வார்டு-  3 தா.அன்பழகன், வார்டு - 4 c.பாண்டி பரணிபுத்தூர், வார்டு - 5 லோகநாயகி சாமிநாதன், ஐயப்பன்தாங்கல், வார்டு-  6 உஷா நந்தினி, ஐயப்பன்தாங்கல் , வார்டு-  7 உமா மகேஸ்வரி, வார்டு-  8 காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு, வார்டு- 9 சுதாகரன், வார்டு-  10 அன்னம்மாள் மோகன், வார்டு-  11 c.பாலகிருஷ்ணன், வார்டு-  12 மலர்விழி முருகன்,பூந்தண்டலம், வார்டு-  13 லட்சாவதி கருணாகரன், திருமுடிவாக்கம், வார்டு-  14 அன்பழகன், நடுவீரப்பட்டு, வார்டு-  15 சங்கீதா வேலு ,சாலமங்கலம், வார்டு-  16 குமுதா சுமன், மணிமங்கலம், வார்டு-  17 மலர்விழி தமிழ் அமுதன், ஆதனூர், வார்டு-  18  சரஸ்வதி மனோகரன், படப்பை, வார்டு-  19 கூட்டணி கட்சி காங்கிரசுக்கு ஒதுக்கீடு, வார்டு-  20 என் . ராஜேந்திரன், சென்னக்ப்பம், வார்டு- 21 ராஜலஷ்மி ராஜி, மாடம்பாக்கம்.



 

ஸ்ரீபெரும்புதூர்

 

 

வார்டு- 1 ஹேமாவதி விமல்ராஜ், பிச்சிவாக்கம், வார்டு- 2 கூட்டணி கட்சி, வார்டு- 3 எம்.கலைவாணி,  வார்டு- 4 கோபால், வார்டு- 5 மோகனன் ,தண்டலம், வார்டு- 6 நா . வெங்கடேசன் ,கோட்டூர், வார்டு- 7 மேனகா மணிகண்டன்,  வார்டு- 8 கருணாநிதி, செல்வழிமங்கலம், வார்டு- 9  உஷா கோதண்டம் ,சந்தவேலூர், வார்டு-10 அந்தோனி வினோத், மொளச்சூர், வார்டு-11 காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு, வார்டு-12 ம.ச.சரவணன் போந்தூர், வார்டு-13 மல்லிகா ரவிச்சந்திரன் ,பிள்ளைபாக்கம்,  வார்டு-14 மாலதி டான் போஸ்கோ, எச்சூர் வார்டு-15 கோமதி கணேஷ் பாபு ,வடகால், வார்டு-16 பரமசிவம், எறையூர்.  ஆகிய இடங்களுக்கு முதற்கட்டமாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

காஞ்சிபுரம்

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2321 பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் வாலாஜாபாத் என 5 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. கிராம வார்டு உறுப்பினர் - 1938,கிராம ஊராட்சித் தலைவர் -274, ஊராட்சி  ஒன்றிய வார்டு உறுப்பினர் - 98, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - 11, உள்ளிட பதிவுகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஒன்றியங்களில் அக்டோபர் 6-ஆம் தேதி அன்று முதற்கட்ட தேர்தல். ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் ஆகிய இரண்டு ஒன்றியங்களுக்கு அக்டோபர் 9ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.