கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கான முன்பதிவு இயந்திரத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
சென்னையில் இருந்து தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களுக்கு, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டதால், போக்குவரத்து மெர்சல் அதிகம் ஏற்பட்டது. அதிகரிக்கும் மக்கள் தொகை கருத்தில், கொண்டும் சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய, கிளாம்பாக்கம் பகுதியில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
மக்கள் வரவேற்பு
தினமும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பயணிகள் பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், சுப முகூர்த்த நாட்களில் 80 ஆயிரம் பயணிகள் வரை பயன்படுத்துகின்றனர்.
இன்னும் சில ஆண்டுகளில் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிக்கல்கள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று ஆகாயம் மேம்பாலம், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் சாலை அமைக்கும் பணிகள் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்படுவதில் நடைமுறை சிக்கல்கள் இருந்ததால், மக்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பி இருந்தது. நடைமுறை சிக்கல்கள் ஒவ்வொன்றும் அடையாளம் காணப்பட்டு , அரசு நிவர்த்தி செய்து வருவதால் பொதுமக்களிடையே வரவேற்பை தற்போது பெற்று வருகிறது. தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தூய்மையாக வைத்துக் கொள்வதையும் அரசு தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. கழிவறை, முறையான குடிநீர், குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகள் உள்ளிட்ட வசதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், அரசு விரைவு பேருந்துகள் முன்பதிவு மையம் செயல்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பல்வேறு நவீன வசதிகளையும், அரசு ஏற்படுத்தி வருகிறது.
சுயசேவை இயந்திரம் (KIOSK SYSTEM)
அந்தவகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், சுயசேவை இயந்திரம் (KIOSK SYSTEM) மூலமாக பேருந்துகளில் முன்பதிவு செய்யும் திட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வின்போது, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா.மோகன், பொது மேலாளர்கள் மற்றும் சி.எம்.டி. ஏ உயர் அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் வரிசையில் காத்திருக்காமல் , ஆட்டோமேட்டிக் என்கிற மூலமாக அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பயணிகள் முன்பதிவு செய்யும் வரிசையில், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம்
வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு இடையில் கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு முன்வைத்து திட்டங்கள் தயாராகி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிளாம்பாக்கத்தை விடுங்க.. வேகம் எடுக்கும் முடிச்சூர்..ஆம்னி பேருந்து நிலையம் நிலை என்ன ?