கால்நடை சேவை மையம் தொடக்கம்

Continues below advertisement


சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரம் பால் பண்ணையில் உள்ள ஆவின் திறன் மேம்பாட்டு மையத்தில் ஆவின் மையத்திற்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில் கால்நடை சேவை மையத்தையும், அதற்கான பிரத்யேக ஆப் - ஐயும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மனோ தங்க ராஜ்; 


மகிழ்ச்சியான நாள் இது, நாடு போற்றும் நான்கு ஆண்டு ஆட்சியை தந்து வளமான தமிழகத்தை வழி நடத்தி செல்லும் 5 ஆம் ஆண்டில் தலைவர் அடியெடுத்து வைக்கிறார், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 


எந்த திட்டத்தை எடுத்துக் கொண்டாலும் நம் தமிழகம் தலை சிறந்து உயர்ந்து நிற்கிறது. சமூக பாதுகாப்பு திட்டங்கள் என்று சொல்லும் நிலையில் இந்திய துணை கண்டத்தில் பட்டினி சாவுகள் ஏற்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் யாருக்கும் அப்படி ஒரு நிலை ஏற்படாத வகையில் புதுமைப் பெண் , நான் முதல்வன் உள்ளிட்ட பல சிறப்பான திட்டங்களை கொண்டு வந்துள்ளது இந்த அரசு. 9.6% என்ற அளவில் மகத்தான வளர்ச்சியை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.


நாடாளுமன்றத்தில் , அண்ணா வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று முழங்கி உள்ளார். இன்று அதே அண்ணாவின் கொள்கைகளை தாங்கி அவர்களுக்கு நம் அரசு சவால் விடும் அளவுக்கு இந்திய துணை கண்டத்தில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குகிறது.


அனைத்து துறைகளிலும் சரித்திரத்தை படைக்கும் ஆட்சி பால்வளத்துறையிலும் சரித்திர சாதனையை படைத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக தான் பெருமக்கள் அவற்றிற்கான சிகிச்சைக்கு மருத்துவர்களை தேடி செல்வதை விட இந்த மையத்தை தொடர்பு கொண்டு எல்லாம் தேடி மருத்துவர் வந்து சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் இந்த துறை திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.


பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை மாற்றியமைப்பது தொடர்பான கேள்விக்கு,


விற்பனை விலையைப் பொறுத்த வரை மக்கள் மீது எந்த கூடுதல் சுமையையும் கொடுக்கக் கூடாது என்று விலையை உயர்த்தக் கூடாது என தலைவர் முடிவெடுத்து இருந்தார். 


அது மட்டும் இல்லாமல் தேர்தல் நேரத்தில் மூன்று ரூபாய் குறைப்பேன் என்று சொல்லியிருந்தார் அதன்படி செய்தார். தரமான பால் கொடுக்கும் விவசாயிகளுக்கு 1 சதவீத insentive கொடுத்தோம். கடன் தொகை குறைந்த வட்டியில் ஒன்பது சதவிகிதமாக குறைத்து அதிக கடன் கொடுத்துள்ளோம். 


எந்தெந்த விவசாயத்தில் தொழிலை மேம்படுத்த கடன் உதவி தேவைப்படுகிறது என்று கேட்கிறார்களோ அத்தனை விவசாயிகளுக்கும் எத்தனை இலட்சமாக இருந்தாலும் கடன் வழங்க இருக்கிறோம். எங்கள் சேவைகளை எந்த அளவிற்கு அதிகப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு அதிகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.


ஏற்கனவே தட்டுப்பாடு இல்லாமல் பால் பொருட்களை வழங்கி வருகிறோம் அதை இன்னும் மேம்படுத்த என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் அதற்கான செயல்பாடுகளை ஆராய்ந்து இன்னும் முறையாக செயல்படுத்துவோம்.


ஆயிரம் கோடி கடன் - சரித்திர சாதனை


கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை விவசாயிகளுக்கு கடன் வழங்கி இருக்கிறோம் இது சரித்திர சாதனை. ஒரு 60 ஆயிரம் இருந்தால் நல்ல மாடு வாங்க முடியும் , எந்த அளவிற்கு விவசாயிகளுக்கு கடன் வழங்கி உள்ளோம் இதற்கான புள்ளி விவரங்க டளை விரைவில் வழங்குகிறோம்.


தமிழ்நாட்டு வரலாற்றில் 38 லட்சம் லிட்டர் ஆவின் பால் கொள் முதல் செய்தது நம் ஆட்சியில் தான். சிலர் இதற்கு முன் 39 லட்சம் கொள்முதல் செய்ததாக சொல்கிறார்கள். நாங்கள் தனியார் பற்றி கவலைப்படுவதில்லை. ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன் புலி வருகிறது பூனை வருகிறது என்கிறார்கள் புலியும் வரவில்லை பூனையும் வரவில்லை ஏன் என்றால் இங்கு இருப்பது சிங்கம்.


ஆவின் பெரிய கட்டமைப்பு உள்ள நிறுவனம் லட்சோப லட்சம் பணியாளர்கள் உள்ளார்கள். எந்த சூழலில் வாழும் விவசாய பெருங்குடிகள் பாதிக்கப்பட கூடாது. மக்களுக்கு முறையாக பொருட்கள் சென்று சேர வேண்டும் என்று செயல்படும் நிலையில் சில சவால்கள் உள்ளது.


தனியார் போன்று லாப நோக்கத்தில் சென்றால் எங்களுக்கு நிலைமை வேறு, நாங்கள் சமூக நோக்கத்தோடு செயல்படுவதாக சில சவால்கள் ஏற்படுகிறது அதை கட்டுக்குள் வைத்திருக்கிறோம்.


எம்.ஆர்.பி விலையை விட கூடுதலாக விலை வைத்து விற்க கூடாது. எம்.ஆர்.பி ஐ விட கூடுதல் விலை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை அப்படி விற்பனை செய்தால் புகார் அளிக்கலாம். நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.


இந்த கால்நடை சேவை மையத்திற்கு 1800 4252 577 டோல் பிரீ எண் கொடுக்கப்பட்டுள்ளது. இதை விட எண்கள் குறைவாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று செயலாளர் அறிவுறுத்தி இருக்கிறார் அதனை அடுத்ததாக செயல்படுத்த முயற்சிப்போம். 25 கணினிகள் வைத்து இந்த கால்நடை சேவை மையத்தை செயல்படுத்தி வருகிறோம்.


பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் விற்பதை மாற்றி பாட்டில்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா ?


மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்திய அளவில் தான் பால் பாக்கெட்டுகள் உள்ளன. பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்தால் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது குறித்து கருத்து கேட்கப்பட்ட போது சில சவால்கள் இருப்பது தெரிய வந்தது.


Virgin plastic இதில் பிரச்சினைகள் இருக்க வாய்ப்பில்லை , மேலும் அதிக நாட்கள் சேமித்து வைக்கப் போவதில்லை மறு சுழற்சிக்கு பயன்படும் அளவில் தான் உள்ளது. பொதுவாக பிளாஸ்டிக் சூடு படும் போது தான் விஷமாக மாறும் ஆவின் பால் எப்போதும் குளிர்ச்சியாக தான் இருக்கும்.


எதிர்க் கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்வது தொடர்பான கேள்விக்கு ,


மனம் திறந்து சொல்கிறேன் இனி அதிகம் விமர்சனம் வரும். ஏன் என்றால் பல நிறுவனங்களுக்கு இந்த துறை வளர்ந்து வருவதில் வருத்தங்கள் உள்ளது. விமர்சனங்கள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை நாங்கள் நிரூபித்தோம்.


ஏழை விவசாயிகளின் அன்றாட வாழ்வாதாரம் இது. 100 % மக்களுக்காக இந்த துறை செயல்படும். என்ன சந்தேகம் இருந்தாலும் 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்.


எந்த தவறு எங்கு நடந்தாலும் எங்கள் கவனத்திற்கு வந்த உடன் கடும் நடவடிக்கை எடுப்போம். எந்த பிரச்சனை என்றாலும் கவனத்திற்கு கொண்டு வாருங்கள் இதை வேண்டுகோளாக வைக்கிறேன்.


ஏடிஜிபி அளவில் விஜி லென்ஸ் மற்றும் காவல் துறையினர் உள்ளார்கள். எங்க என்ன பிரச்சனை நடந்தாலும் புகார்கள் கொடுக்கலாம் நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


அங்கன் வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் பால் வரும் காலங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட வாய்ப்புள்ளதா ? என்ற கேள்விக்கு


முதலில் நீதிக் கட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது. பின் மதிய உணவு கொடுக்கப்பட்டு அது சத்துணவாக மாற்றப்பட்டு பின்பு முட்டையுடன் சத்துணவு கொடுக்கப்பட்டது , ஒரு காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.


தொடர்ந்து நம் ஆட்சி கால கட்டத்தில் பொருளாதாரம் மேம்படும் பொழுது நிச்சயம் இதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.