சிறுவன் வைத்த கோரிக்கை
கீர்த்திவர்மா என்ற மாணவன் +2 தேர்வில் இரு கைகளும் இன்றி 471 மதிப்பெண் பெற்றுள்ளார். மாற்றுத் திறனாளி மாணவர் கீர்த்திவர்மா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், தனக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவுமாறு கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாற்றுத் திறனாளி மாணவர் கீர்த்திவர்மாவை சென்னை தலைமை செயலகத்திற்கு வரவழைத்து, அவருக்கு வேண்டிய சிகிச்சை வழங்குவதற்குரிய ஆலோசனையினை மருத்துவக் குழுவினரையும் அழைத்து ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அமைச்சர்
தமிழக முதலமைச்சர் நேற்று ஒரு செய்தியினை வெளியிட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த சிறுவன் கீர்த்திவர்மா என்ற சிறுவன் தன்னுடை இரண்டு கைகளை இழந்த நிலையில் அவர் எழுதிய 12 ஆம் வகுப்பு தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 471 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இது மிகப்பெரிய ஒரு வெற்றி, இவர் சமூக வலை தளங்களில் வேண்டுகோள் விடுத்துள்ளார் , தமிழகத்தில் உறுப்பு தானத்திற்கு பெரும் வகையில் வரவேற்பும் வழிகாட்டுதலும் உள்ளது , இதனை அறிந்து கீர்த்தி வர்மா உறுப்பு மாற்று சிகிச்சை மூலமாக கோரிக்கை வைத்தார். உடனடியாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி தலைவர் மாணவர் வீட்டுக்கு சென்று பல்வேறு வகையான சலுகைகள் வழங்குவதாக குறிப்பிட்டார். நானும் நேற்று அவருடைய வீட்டுக்கு சென்று பேசினேன் , மாணவருக்கு இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் உருவாக்கப்பட்ட கைகள் எது செய்யலாம் என கேட்ட போது உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்வதற்கு கேட்டு கொண்டார்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் தலைவர் நம்முடன் இணைந்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் ஸ்டான்லி மற்றும் தனியார் அரசு மருத்துவமனையில் குளோபல் மருத்துவமனையிலும் சிறந்த வகையில் உறுப்பு மாற்று நடைபெற்று வருகிறது , இன்று உறுப்பு மாற்று ஆணையத்தில் கீர்த்திவர்மா பெயர் பதிவு செய்யப்படுகிறது. அடுத்த இரண்டு நாட்களில் ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படும் அவருக்கு மூளை சாவு அடைந்த நபர்கள் உறுப்பு தானம் செய்ய விரும்பினால் 6 மணிநேரத்தில் அந்த உறுப்பை மாற்றி இணைத்து கொள்ளலாம்.
வாகனங்கள் எளிதாக ஓட்டலாம்
மாணவருக்கு தன்னுடைய பொறியியல் படிப்பை 4 வருடம் முழுவதும் செலவினை ஆனந்தம் அறக்கட்டளை ஏற்றுக் கொள்கிறது. அவர் சென்னையில் படிக்கும் நிலையில் இந்த சிகிச்சைக்கும் மேலும் சுலபமாக இருக்கும் , முதலமைச்சர் குழந்தைகளின் எதிர்ப் பார்ப்பை பூர்த்தி செய்து வருகிறார். அந்த வகையில் கீர்த்திவர்மாவிற்கு கைகள் பொருத்தப்பட்ட பிறகு வாழ் நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். அந்த கைகள் மூலம் வாகனங்கள் ஓட்டுவது கூட மிக சுலபமாக இருக்கும். கடந்த ஓராண்டில் 418 நபர்கள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். உலகளவில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் உடல் உறுப்பு தானம் செய்துள்ள ஒரே இடம் தமிழகம் மட்டுமே , கீர்த்தி வர்மா சிகிச்சைக்கு கட்டணம் அரசு முதலமைச்சர் காப்பீடு திட்டம் மூலமாக மேற்கொள்ளப்படும். இதுவரை 26 நபர்கள் உடல் உறுப்பு தானம் வேண்டும் என காத்திருக்கின்றனர் என்றார்.