உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மணி விழா


சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மணி விழா நடைபெற்றது. இவ்விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உயர் கல்வித் துறை அமைச்சர் செழியன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை வழங்கினர்.


அமைச்சர் செழியன் மேடை பேச்சு


மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றால் அது தமிழ் மொழி தான். பிறமொழிகள் வேலை வாய்ப்புக்கும் படிப்புக்கும் பயன்படும், தாய்மொழி தமிழ் நம் உயிராய், உடலாய், அன்னையாய், தந்தையாய், என எல்லாம் சேர்ந்தது தான் நம் தமிழ் மொழி.


தமிழ் மொழி மேலும் மேலும் சிறப்பப்படுகிறது என்றால் அதற்கு ஆட்சியாளர்களும் திராவிட கழகம் தான் காரணம். இன்று கூட மும்மொழி கொள்கை திணிப்போம் என மாநிலங்களுக்கு மத்திய அரசு திணிக்கிறது.அதற்கு முதன் முதலாக குரல் கொடுத்தவர் நமது முதலமைச்சர் தான். கலைஞர் வந்த பிறகு தான் தமிழ் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களாக வர முடிந்தது.


அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு 


சென்னை, மதுரை , கோவை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் வெளி நாடுகளிலிருந்து வரும் நபர்களை பரிசோதனை செய்யும் நடைமுறை நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து விமான நிலையங்களிலும் ஒரு தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் குரங்கம்மை நோயாளிகளுக்கான 10 வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.


27 வயதுள்ள இளைஞர் நேற்றைய முன் தினம் சார்ஜா நாட்டிலிருந்து கோவை விமான நிலையம் மூலமாக தமிழகம் வந்தடைந்தார். அவரை பரிசோதனையில் ஈடுபடுத்திய பொழுது அவருக்கு குரங்கம்மை நோயில் இருக்கும் கொப்பளங்கள் கண்டறியப்பட்டது. அவர் பதட்டப்பட்டு பரிசோதனை செய்யாமல் தப்பி சென்றார். அதனை தொடர்ந்து அவரை கண்டறிந்து மேலும் பரிசோதித்த பொழுது அவருக்கு 27 இடங்களில் கொப்பளங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டது.


ஆனால் அவருக்கு குரங்கம்மை தொற்று இல்லை எனவும் சிக்கன் பாக்ஸ் தொற்று மட்டுமே உள்ளது என கண்டறியப்பட்டது. மேலும் மறுபரிசோதனைக்கு பூனே தேசிய வைரலாஜி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரையில் தமிழகத்தில் எந்த விதமான பெரிய அளவிலான பட்டாசுகள் தொடர்பான விபத்துகள் இல்லை என்று கூறினார்.