Just In

Impact Makers Conclave LIVE: தமிழர் பார்வையில் தடம் பதிக்கும் தமிழ்நாடு, வளர்ச்சிக்கான ஆலோசனைகளை விவாதிக்கும் இம்பேக்ட் மேக்கர்ஸ் மாநாடு

Operation Sindoor: பிரம்மோஸ் தாக்கியது உண்மை தான்! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

தமிழ்நாட்டில் புதியதாக 4 கல்லூரிகள் - மொத்தம் 180, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - அரசு அறிவிப்பு

UN Job Cuts: இதென்னடா ஐ.நாவிற்கு வந்த சோதனை - கம்பி நீட்டிய ட்ரம்ப், 7000 பேரை வேலையை விட்டு நீக்க முடிவு

Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
Melmaruvathur Marriage Hall: மேல்மருவத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் துரிதம் ..! திருமண மண்டபம் இடிக்கப்பட்டு வருகிறது..!
மேல்மருவத்தூர் கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் இடிக்கப்படும் புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது
Continues below advertisement

திருமணம் மண்டபம் இடிக்கப்பட்டு வருகிறது
மேல்மருவத்தூர்
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துபாக்கம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், சோத்துபாக்கம் மேல்மருவத்தூர், கீழ் மருவத்தூர், கேசவராயப்பேட்டை, பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வார கோரியும், நீர்நிலை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த நான்கு கிராமங்களில் உள்ள ஏரிகள் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் வருவாய்த்துறையினர், அளவடி செய்தனர். அளவில் செய்து நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குழப்பமான ரிப்போர்ட்
இதுகுறித்து அப்பொழுது காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது மாவட்ட ஆட்சியர் பொன்னையா சம்பந்தப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளது என நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தார். அவ்வாறு குறிப்பிடப்பட்ட ஆய்வில், இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நபர்களின் குறித்த விவரங்கள் சரியாக தெரிவிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து ராஜா என்பவர் மீண்டும் வழக்குத் தொடுத்து முழு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணை
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நெடுங்காலமாக மக்களுக்கு நீராதாரமாக இருந்து வந்த இந்த ஏரி தற்போது கல்யாண மண்டபம், உணவு விடுதிகள், பேருந்து நிலையம், கார் பார்க்கிங் என முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த 2015 ஆம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஒரு மாதத்தில் அகற்ற வேண்டும்
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரம் ஆஜராகி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதனை பதிவு செய்த நீதிபதிகள் ஆக்கிரமிப்பை ஒரு மாதத்தில் அகற்றி, அதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
முன்னதாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நாங்கள் வருகின்ற மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி விடுவோம் என தெரிவித்திருந்தனர். ஏன் இதுவரை இன்னும் ஆக்கிரமிப்பை அகற்ற வில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, இனிமேல் காத்திருக்க முடியாது சரியாக ஒரே மாதத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதா என மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் இது குறித்து கால அவகாசம் வழங்க வேண்டும் என மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டது.
அதேபோல மேல்மருவத்தூர் கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், ABP NADU இணையதளத்தில் செய்தி வெளியாகி இருந்தது. பின்னாளில், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மேல்மருத்தூர் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வந்த நிலையில், நாளை மறுதினம் ( 08/06/22) அன்று மேலும் இருக்கும் ஆக்கிரமிப்புகளை நோட்டீஸ் வழங்கி உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம். புல எண் 13/2 அடிகளார் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியையும். புல எண் 59 இல், உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளும் அகற்றப்பட்டுதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து சென்ற பொழுது நேர அவகாசம் கோரப்பட்டது, இதனை ஏற்றுக் கொண்டு வருவாய்த்துறை என நேர அவகாசம் அளித்தனர். இதனையடுத்து தற்போது ஆக்கிரமிப்பு பகுதிகளை தாங்களாகவே அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆதிபராசக்தி கோவிலுக்கு சொந்தமான, திருமண மண்டபத்தை இடிக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.