மேலும் அறிய
Advertisement
குயின்ஸ்லாந்து ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த ரூ.200 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு - அதிகாரிகள் நடவடிக்கை
ஸ்ரீபெரும்புதூர் அருகே குயின்ஸ்லாந்து என்ற தனியார் பொழுதுபோக்கு நிறுவனம் ஆக்கிரமித்து வைத்திருந்த 200 கோடி மதிப்பிலான 32.41 ஏக்கர் அரசு நிலத்தை வருவாய்த்துறை இன்று அதிரடியாக மீட்பு
தமிழகம் முழுவதும் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை அதிரடியாக மீட்டெடுக்கும் பணியில் வருவாய்த்துறையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் நீதிமன்ற வழிகாட்டுதலின் படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தி உத்தரவின்படி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலுள்ள குயின்ஸ்லாந்து எனும் தனியார் பொழுதுபோக்கு நிறுவனம் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருந்த சுமார் 200 கோடி மதிப்பிலான 32.41 ஏக்கர் அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் காவல்துறையினரின் பாதுகாப்பு முன்னிலையில் இன்று அதிரடியாக மீட்டெடுத்து அரசு நிலம் மீட்கப்பட்டது குறித்த அறிவிப்பு பலகையினை வைத்தனர்.
குறிப்பாக இன்று வருவாய்த்துறையினரால் மீட்டெடுக்கப்பட்ட அரசு நிலத்தில் குயின்ஸ்லாந்து நிருவனம் ரோப் கார், புட் கோர்ட், போட் ஹவுஸ், நீச்சல் குளம் உள்ளிட்ட இடங்களாக மாற்றி அமைத்து பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரபல தனியார் (குயின்ஸ் லேண்ட்) பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது . இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள பகுதியில் அதன் நிறுவனத்தால் பல ஆண்டுகளாக நீர்நிலை மற்றும் அனாதீனம் வகைப்பாட்டு புறம்போக்கு அரசு நிலம் சுமார் 32 ஏக்கர். 41 சென்ட் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டு பயன்படுத்தி வந்துள்ளனர்.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் நில நிர்வாக ஆணையம் உத்தரவின்பேரில் இன்று 200 கோடி மதிப்புடைய அரசுக்கு சொந்தமான நிலத்தை திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரன் வட்டாச்சியர் ஜெயகாந்தன் உள்ளிட்ட வருவாய்துறையினர் ஆகியோர் காவல்துறை பாதுகாப்புடன் இன்று வருவாய் துறையின் கட்டுப்பாட்டிற்குள் 200 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்டு கையகப்படுத்தியுள்ள என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion