புதிய நியாய விலை கடை திறப்பு விழா


 

காஞ்சிபுரம்  ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்கதிர்பூர், மேல்கதிதிர்பூர், மேல்ஒட்டிவாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் புதிய நியாய விலை கடை, புதிய அங்கன்வாடி மையம், புதிய தார் சாலை அமைத்தல், பள்ளிகளுக்கு சுகாதார நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் திறப்பு கடந்த மாதம் 30 ஆம் தேதி நடைபெற்றது.

 

 


திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டின் முற்றுகிட முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்ட காட்சி


 

ஒருமையில் விமர்சித்தார்

 

அப்பொழுது கீழ்கதீர்பூர் பகுதியில் வசித்து வரும் கிராம மக்கள் மற்றும் 100 நாள் வேலை பணியாற்றும் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனை முற்றுகையிட்டு எனக்கு ஏன் மகளிர் உரிமை தொகை திட்டம் மாதம் ரூ.1000 கிடைக்கவில்லை என தொடர்ந்து ஒருவர்பின் ஒருவராக தெரிவித்து சில நேரத்தில் அனைவரும் ஒன்று கூடி அனைவருக்கும் கிடைக்கவில்லை என கூச்சலிட்டனர். இதனை எடுத்து அவர்கள் மத்தியில் பேசிய காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர், பிரதமர் மோடி 15 லட்சம் போடுவதாக கூறினார் .

 

 


திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டின் முற்றுகிட முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்ட காட்சி


 

அதை அவர் செய்தாரா என பிரதமரை ஒருமையில் விமர்சித்தார். சட்டென்று கோபம் அடைந்த சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், பத்தாண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறி ஏமற்றினார்களே.. மோடியை ஏன் போய்கேட்கவில்லை. அவரிடம் போய் கேட்க வேண்டியதுதானே என கோபித்துக் கொண்டார், உடனே கூட்டத்திலிருந்து பெண்மணி ஒருவர் மோடி அவர்களை வர சொல்லுங்க நான் அவரிடம் கேட்கிறோம். நீங்கள் தானே எங்களிடம் வந்திருக்கிறீர்கள் என கேட்டனர்.

 

பாஜகவினர் 150-க்கும் மேற்பட்டோர் கைது

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் பல்வேறு ஊடகங்களிலும் வைரலாக பரவிய நிலையில், நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாஜகவினர் புகார் மனு அளித்திருந்தனர். இந்தநிலையில், பொதுமக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் பிரதமர் மோடியை இழிவாக பேசியதாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் வீட்டை முற்றுகையிட முயன்ற காஞ்சிபுரம் மாவட்ட பாஜகவினர் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாஜகவினர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

 


திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டின் முற்றுகிட முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்ட காட்சி


 

 திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு

 

இந்தநிலையில் பாஜகவினர் சட்டமன்ற உறுப்பினர் வீட்டை முற்றுகை இட முயன்ற தகவல் வந்ததால் திமுகவினர் எம்எல்ஏ வீட்டிற்கு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தான் சுமார் 200 மீட்டர் தூரத்திலே பாஜகவினர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதனால் காஞ்சிபுரம் நகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.