வாலாஜாபாத் அருகே தனியார் நிலத்தில் வெட்டப்பட்ட 50 ஆண்டுகள் பழமையான அரச மரம், ஆலமரத்தை வாலாஜாபாத் ரயில் நிலைய வளாகத்தில் நவீன முறையில்  நடப்பட்டது. வாலாஜாபாத் பேரூராட்சி  திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம், தன்னார்வ அமைப்பினர் உதவியுடன் நட்டனர்.


காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்கா, நத்தநல்லூர் கிராமத்தில் தனியார் நிலத்தில் இருந்த 50 ஆண்டுகள் பழமையான அரச மரமும், ஆல மரமும், வெட்டி அகற்றப்பட்டது. இந்நிலையில் 50 ஆண்டு பழமையான மரங்கள் வீணாவதை  கண்ட தன்னார்வ அமைப்பினர் மரத்தை வேறு இடத்தில் நட்டு பராமரிக்க முடிவு செய்தனர். இதையடுத்து வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகத்திடமும், வாலாஜாபாத் ரயில் நிலைய நிர்வாகத்திடமும் அணுகி மரங்களை நட அனுமதி பெற்றனர்.


 



 திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம், தன்னார்வ அமைப்பினர் உதவியுடன் நட்டனர்.


இதனைத் தொடர்ந்து நத்தாநல்லூர் கிராமத்தில் இருந்து அரச மரமும், ஆல மரமும் வேருடன் பிடுங்கப்பட்டு மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டு மரத்தை லாரி மூலம் வாலாஜாபாத் ரயில் நிலையம் வளாகத்திற்கு கொண்டு வந்தனர்.


 



 திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம், தன்னார்வ அமைப்பினர் உதவியுடன் நட்டனர்.


 


ரயில் நிலைய வளாகத்தில் வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் இல்லா மல்லி ஸ்ரீதர் தலைமையில் வாலாஜாபாத் பேரூராட்சியில் செயல்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், வாலாஜாபாத் ரயில் நிலைய வளாகத்தில் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற நிர்வாகத்தினரும் தன்னார்வ அமைப்பினரும் இணைந்து அரச மரத்தையும், ஆல மரத்தையும் நவீன முறையில் நடும் பணியை மேற்கொண்டனர்.


 



வாலாஜாபாத் அருகே தனியார் நிலத்தில் வெட்டப்பட்ட 50 ஆண்டுகள் பழமையான அரச மரம், ஆலமரத்தை வாலாஜாபாத் ரயில் நிலைய வளாகத்தில் நவீன முறையில் நடப்பட்டது.


 


50 ஆண்டுகள் வளர்ந்து பழமையான மரங்களை வெட்டி வீணடிக்காமல் நவீன முறையில் வேறு இடத்தில் நட்டு பராமரிக்கும் செயலை மேற்கொள்ளும் வாலாஜாபாத் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினரையும், தன்னார்வ அமைப்பினரையும் பல்வேறு தரப்பினர் பாராட்டி உள்ளனர்.