சொத்து உரிமையாளர்கள்


கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சிகள் சட்டம் 1998-க்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 13.04.2023 முதல் தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சிகள் விதிகள் 2023, நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023-2024 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியினை, ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்புகள் வாயிலாக விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




வசூல் மையங்கள் 


சொத்து உரிமையாளர்கள், சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரிவசூலிப்பாளர்கள், மாநகராட்சி, மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் மூலம் அமைந்துள்ள வசூல் மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகையினை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




காஞ்சிபுரம் மாநகராட்சி


இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு  2023-2024 ஆம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய, சொத்து வரியினை 30-04-2023 ஆம்  தேதிக்குள் செலுத்தினால், 5% ஊக்கத்தொகையாக விலக்களிக்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் தெரிவிக்கப்படுகிறது. மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வரி வசூல் மையங்கள் இயங்கும் எனவும்  தெரிவிக்கப்படுகிறது.


சொத்துவரி செலுத்துவதற்கான வரிவசூல் மையங்களின் விவரம்


1. மாநகராட்சிஅலுவலக வரி வசூல் மையம்.



2. பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன்தெரு



3) T.K. நம்பிதெரு, விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் அருகிலுள்ள வரி வசூல் மையம்.



4) எல்லப்பன் நகர் பூங்கா வரி வசூல் மையம்.


மேலும் சொத்து வரியினை ஆன்லைன் மூலம் செலுத்த கீழே உள்ள லிங்க் ஐ பயன்படுத்தி பயன் பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.

https://tnurbanepay.tn.gov.in/PT_CPPaymentDetails.aspx# என காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.