காஞ்சிபுரம் அருகே உள்ள காலூர்  ஊராட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு சென்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி திடீரென அருகில் இருந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி வகுப்பறைகளில் நுழைந்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மாணவ- மாணவிகளிடம் உரையாடினார்.  



 

இதை தொடர்ந்து 5 ஆம் வகுப்பு, 6 ஆம் வகுப்பு,மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆசிரியையாக மாறி வகுப்பறை கரும்பலகையில் எழுதி இருந்த ஆங்கில இலக்கண பாடத்தை படிக்க வைத்து அதற்கான விளக்கத்தை மாணவ - மாணவிகளுக்குகூறி பாடம் நடத்தினார்.  மாவட்ட ஆட்சியர் அப்போது மாணவர்களிடம் தொடர்ந்து ஆங்கிலம் இலக்கணம் குறித்த கேள்விகளை எழுப்பினார். பதில் தெரியாமல் இருந்த மாணவர்களிடம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அர்த்தி எவ்வாறு அதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதை குறித்து விளக்கி கூறினார். இதனை தொடர்ந்து பல மாணவர்களிடம் புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொல்லி சோதனை செய்தார். சரியாக படிக்காத மாணவர்களை திருத்தியது, மட்டுமில்லாமல் ஆசிரியர்களிடம் மாணவர்கள் படிப்பதற்கு தொடர்ந்து பயிற்சி கொடுங்கள், மாணவர்கள் கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் கிளாஸில் இருப்பதால் தொடர்ந்து பயிற்சி அளியுங்கள் என கோரிக்கை வைத்தார்.





பின்னர் பள்ளி ஆசிரியர்- ஆசிரியைகளிடம் மாணவ மாணவிகளுக்கு முறையாக பாடம் நடத்த உத்தரவிட்டு ஆலோசனைகளை வழங்கினார். ஆசிரியையாக மாறி பாடம் நடத்தி அசத்திய மாவட்ட ஆட்சியரின் செயலை கிராம மக்களும், ஆசிரியர்களும் வியந்து , வெகுவாக பாராட்டினார்கள்.


 

மேலும் படிக்க...