மேலும் அறிய

Kanchipuram Cylinder Blast: காஞ்சிபுரம் தீ விபத்து: தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை... 5 பேர் உயிரிழப்பு 5 பேர் கவலைக்கிடம்..

காஞ்சிபுரம் அருகே கேஸ் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேஸ் சிலிண்டர் விபத்து..
 
காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமாரின் மனைவி சாந்தி என்பவர் கேஸ் ஏஜென்சி நடத்தி வந்தார். அஜய்குமார் தம்பி ஜீவானந்தத்தின் வீட்டின் அருகே உள்ள கிடங்கில் சிலிண்டர்கள் இருப்பு வைக்கபட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இங்கு பெரிய சிலிண்டர்களில் இருந்து சிறிய சிலிண்டர்களுக்கு கேஸ் முறையான அனுமதியின்றி கேஸ் நிரப்பும் வேலையை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

Kanchipuram Cylinder Blast: காஞ்சிபுரம் தீ விபத்து: தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை... 5 பேர் உயிரிழப்பு 5 பேர் கவலைக்கிடம்..
 
 
12 பேர் தீவிர சிகிச்சை..
 
இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி இரவு சுமார் 7 மணி அளவில் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் பெரிய சிலிண்டர் ஒன்று தவறி கீழே விழுந்து வெடித்தது. இதில், அருகில் இருந்த மற்ற சிலிண்டர்களுக்கும் தீ பரவியது. இதில் காஸ் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், அவருடைய மகள்கள் நிவேதா, சந்தியா, பூஜா மற்றும் வடமாநில ஊழியர்கள் உள்ளிட்ட 12 பேர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 80 முதல் 90 சதவீதத்துக்கு மேல் படுகாயம் அடைந்த ஜீவானந்தம், சந்தியா, பூஜா, அருண், குணா ஆகிய 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும், 30 முதல் 50 சதவீத காயம்பட்ட 7 பேரும் சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Kanchipuram Cylinder Blast: காஞ்சிபுரம் தீ விபத்து: தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை... 5 பேர் உயிரிழப்பு 5 பேர் கவலைக்கிடம்..
 
மேலும் தீவிபத்தில் காயமடைந்த வடமாநிலத்தை சேர்ந்த அமோத்குமார், மற்றும் ஜீவானந்தம், அவரின் மகள் சந்தியா ஆகியோர் சிகிச்கை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து இன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தை சேர்ந்த குணால், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுராநல்லூர் பகுதியை சேர்ந்த கிஷோர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் கேஸ் குடோன் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
 
5 பேர் மீது வழக்குப்பதிவு..
 
இந்த விபத்து தொடர்பாக தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய், அவருடைய மனைவி சாந்தி தம்பிகள் ஜீவானந்தம், பொன்னிவளவன், மேலாளர் மோகன்ராஜ் ஆகிய ஐந்து பேர் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜீவானந்தம் உயிரிழந்துள்ளார். தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் மற்றும் கேஸ் குடோன் மேலாளர் மோகன்ராஜ் என இரண்டு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kanchipuram Cylinder Blast: காஞ்சிபுரம் தீ விபத்து: தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை... 5 பேர் உயிரிழப்பு 5 பேர் கவலைக்கிடம்..
 
 
உயிரிழந்தவர்களின் பட்டியல்..
 
1. ஜீவானந்தம்
2. பூஜா
3. கிஷோர்
4 .அமோத்குமார்
5. குணால்
 
சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்
 
1. நிவேதா (21) (60%) - வாலாஜபாத்.
2.தமிழரசன் (10) (76%) - வாலாஜாபாத்.
3.சக்திவேல் (32) (40 %) - பண்ருட்டி.
4.கோகுல் (22) (60%) - வாலாஜாபாத்.
5. சண்முகப்பிரியன்(17)(90%) - தேவரியம்பாக்கம்,
 
ஆகிய 5 நபர்களுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” - பிரதமர் மோடி..
”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” - பிரதமர் மோடி..
Breaking News LIVE : மக்களவை தேர்தல் பணிக்கு வராத 1,500 ஊழியர்களுக்கு நோட்டீஸ்
Breaking News LIVE : மக்களவை தேர்தல் பணிக்கு வராத 1,500 ஊழியர்களுக்கு நோட்டீஸ்
Gouri Kishan : என்னது 96 ராம் - ஜானுவுக்கு நிஜமாவே கல்யாணமா? ஷாக்கான நெட்டிசன்ஸ்..
என்னது 96 ராம் - ஜானுவுக்கு நிஜமாவே கல்யாணமா? ஷாக்கான நெட்டிசன்ஸ்..
Lok Sabha Elections 2024: பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்  -  மதுரையில் எடப்பாடி பழனிசாமி
பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம் - மதுரையில் எடப்பாடி பழனிசாமி
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Annamalai Nomination Issue : வேட்புமனு சர்ச்சை” இது ஒரு விஷயமே இல்ல” அ.மலையின் புது TWIST | BJPSingai Ramachandran :”அ.மலை மிரட்டி பணம் வசூலித்துள்ளார்” சிங்கை ராமச்சந்திரன் பகீர் | AnnamalaiJothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” - பிரதமர் மோடி..
”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” - பிரதமர் மோடி..
Breaking News LIVE : மக்களவை தேர்தல் பணிக்கு வராத 1,500 ஊழியர்களுக்கு நோட்டீஸ்
Breaking News LIVE : மக்களவை தேர்தல் பணிக்கு வராத 1,500 ஊழியர்களுக்கு நோட்டீஸ்
Gouri Kishan : என்னது 96 ராம் - ஜானுவுக்கு நிஜமாவே கல்யாணமா? ஷாக்கான நெட்டிசன்ஸ்..
என்னது 96 ராம் - ஜானுவுக்கு நிஜமாவே கல்யாணமா? ஷாக்கான நெட்டிசன்ஸ்..
Lok Sabha Elections 2024: பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்  -  மதுரையில் எடப்பாடி பழனிசாமி
பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம் - மதுரையில் எடப்பாடி பழனிசாமி
Prithviraj Sukumaran : 98-இல் இருந்து 68 கிலோ.. ஆடு ஜீவிதம் படத்திற்காக 30 கிலோ எடை குறைத்த பிருத்விராஜ்
98-இல் இருந்து 68 கிலோ.. ஆடு ஜீவிதம் படத்திற்காக 30 கிலோ எடை குறைத்த பிருத்விராஜ்
ICC Elite Panel: ஐசிசி எலைட் பேனலில் இடம்பிடித்த முதல் வங்கதேச அம்பயர்.. சிறப்பு பெருமையை பெற்ற ஷரபுத்தவுலா..!
ஐசிசி எலைட் பேனலில் இடம்பிடித்த முதல் வங்கதேச அம்பயர்.. சிறப்பு பெருமையை பெற்ற ஷரபுத்தவுலா..!
Class 10th Exam: 10-ஆம் வகுப்பு ஆங்கில பொதுத்தேர்வு: 16,550 மாணவர்கள் ஆப்சென்ட்; 4 பேர் முறைகேடு- விவரம்
Class 10th Exam: 10-ஆம் வகுப்பு ஆங்கில பொதுத்தேர்வு: 16,550 மாணவர்கள் ஆப்சென்ட்; 4 பேர் முறைகேடு- விவரம்
Mumbai Indians: பாண்ட்யாவால் இரண்டாக உடைந்த மும்பை அணி? ரோகித் பக்கம் யார்? உடைக்கும் வீடியோ ஆதாரங்கள்..!
Mumbai Indians: பாண்ட்யாவால் இரண்டாக உடைந்த மும்பை அணி? ரோகித் பக்கம் யார்? உடைக்கும் வீடியோ ஆதாரங்கள்..!
Embed widget