கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சக மாணவிகள் 50 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. மிக வேகமாக பரவும் வைரஸ் தொற்று  என்பதால், தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன.  இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பின் வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது .



 


இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும், பல்வேறு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொடுக்கப்பட்டு, ஊரடங்கு திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான ஆணையை அரசு பிறப்பித்தது . அதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டன.


கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிக்காத, வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.  அதேபோல அறிகுறி இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




 


இந்நிலையில், கடந்த 4ஆம் தேதியன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த பெரிய சிறுவத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு பள்ளிக்கு வந்த போது, அவருக்கு தொற்று அறிகுறி இருந்தது. ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அனுப்பி வைத்தனர். மேலும், அவருக்கு மேலுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 ஆம் தேதி கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மாணவி நேற்று பள்ளிக்கு வந்த நிலையில், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.


சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், அவருடன் படிக்கும் சக மாணவியர் 50 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பள்ளியில் மீதமுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இன்று பரிசோதனை செய்யப்படும் என சுகாதார துறையினர் தெரிவித்தனர். இதே போன்று, சின்னசேலம் அடுத்த அம்மையகரம் அரசு உயர்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியைக்கு கடந்த 4 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.