சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழிசை சவுந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் ;
மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் அவர்கள் கொரோனா காலத்தில் எந்த அளவிற்கு சேவை செய்துள்ளார் என்று என்னால் துணிச்சலாக சொல்ல முடியும். நாடு முழுவதும் 150 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருந்தார்கள் என்றால் அதற்கு பிரதமர் மோடி கொண்டு வந்த தடுப்பூசி தான் காரணம்.
இன்றைக்கு உதயநிதியும் இந்த நாட்டு மக்களும் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்றால் அதற்கு தடுப்பூசி தடுப்பூசி தான் காரணம். நாட்டு மக்களாக தனது வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றார். ஆகையால் பிரதமரை பற்றி பேசுவதற்கு உதயநிதிக்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் இல்லை. ஒரு டீ கடையில் இருந்து அரசியல் பதவிக்கு வந்து ஒரு உயரிய பிரதமர் ஆகியிருக்கிறார்.
விஜயகாந்த் கண்ணீர் வடித்து இருப்பார்
காமராஜரை தோற்கடித்த ஒரு கட்சியோடு காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொண்டு , மரியாதைக்குரிய விஜயகாந்த் அவர்கள் எந்த கட்சியை எதிர்த்து கூறினாரோ அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு இவர் பேசிக் கொண்டிருக்கின்றனர். விஜயகாந்த் இருந்திருந்தால் இவர்களுடைய கூட்டணியை பார்த்து கண்ணீர் வடித்து இருப்பார்.
ஆதாரத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய உத்தரவு
உங்களுடைய ஆட்சியில் 10 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. ED - க்கு பயப்பட மாட்டேன் என்று சொல்கிறீர்களே , மூன்று முறை வழக்கு பதிவு செய்யாமல் இருந்து விட்டு இன்றைக்கு உயர் நீதிமன்றம் சொல்லிய பிறகும் வழக்கு பதிவு செய்யாமல் பழிவாங்கல் செயல் இன்று சொல்கிறீர்கள் நேரு அவர்கள் மீது அதிகாரப் பூர்வமான ஆதாரத்தின் அடிப்படையில் தான் உயர்நீதிமன்றம் இந்த கருத்தைச் சொல்லி இருக்கிறது.
ஜனநாயகன் திரைப்படம் - மத்திய அரசு காரணம் இல்லை
ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் போர்டு என்னவெல்லாம் கூறியதோ அவர்கள் அதை நீக்கி இருக்கலாம் ஆனால் அவர்கள் அதை விட்டு விட்டு உயர் நீதிமன்றம் சென்று விட்டனர். ஜனநாயகன் திரைப்படம் வெளியே வராமல் இருப்பதற்கு மத்திய அரசு காரணம் இல்லை.
