செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட கொத்திமங்கலம் கிராமத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கிளை துவக்க விழா மற்றும் சர்வதேச ஆதிவாசிகள் தினம் கொண்டாடப்பட்டது. சங்கத்தின் மாவட்ட செயலாளா் எம்.அழகேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆதிவாசி உரிமைக்கான  அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான  பி.சண்முகம்,  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் இரா.சரவணன் ஆகியோர் கிளையின் பெயர்பலகை சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினர். முன்னதாக மலைவாழ் மக்களின் குழந்தைகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.




நிகழ்ச்சியின் இறுதியல் செய்தியாளர்களை சந்தித்த ஆதிவாசி உரிமைக்கான தெசிய அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான  பி.சண்முகம், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆதிவாசி மக்கள் நாடு சுதந்திரம் அடைந்து 75 அண்டுகள் கடந்தும் ஒரு முன்னேற்றக்கரமான இதர சமுகத்திற்கு ஈடாக வாழ்க்கையை எட்ட முடியாத நிலை உள்ளது. மத்திய மாநில அரசுகள் பழங்குடியின துணைத் திட்டம் என்ற பெயரில் நிதி ஒதுக்கீடு செய்தாலும் அந்த நிதி ஆதிவாசிகளுக்கும், பழங்குடியின மக்களின் வீடுகளுக்கு சென்று சேருவதில்லை.  இடைத்தரகர்களால் சுரண்டப்பட்டு கொள்ளையடிக்கப்படுகின்றது.  அரசு ஆதிவாசி மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கும் நிதி அவர்களிடம் முழுமையாக வந்துசேர  மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.


பழங்குடி துணைத் திட்டத்தை பொருத்தவரை அவர்களுக்கு எது தேவை என்பது சம்பந்தமாக பழங்குடி  சங்க பிரதிநிதிகளிடம் கலந்து பேசி திட்டமிடவேண்டும். அதிகாரிகளிடம் மட்டும் பேசி திட்டங்களை உருவாக்குவது  பழங்குடி மக்களுக்கு தொடர்பில்லதா திட்டங்களுக்கு நிதி செலவு செய்யும் அவலநிலை என்பது இருந்து வருகின்றது. பழங்குடியின மக்கள் பின்னடைவு காலிப் பணியிடங்கள் பல்லாண்டு காலமாக நிரப்பப்படாமல் உள்ளது.  இதுகுறித்து சென்னை உயர்நீதி மன்றம் 2011 ஆம் ஆண்டு குறிப்பிட்ட கால வரையறைக்குள், பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என உத்தரவிட்ட பிறகும், இதுவரை தமிழகத்தில் அந்த உத்தரவு அமல்படுத்தப்படாமல் உள்ளது. தமிழக முதல்வர், தலித் பழங்குடியின மக்களின் பின்னடைவு காலிப்பணியிடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  பழங்குடியின இளைஞர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் அவதிப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.




தலைநகர் டெல்லியில் கடந்த பத்து மாதங்களாக போராடி வரும் விவசாயிகளின் பேராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக ஒன்றிய அரசு செயல்பட்டுவருகின்றது. விவசாயிகளை அழைத்து பேசுவதற்கு பதிலாக அடக்குமுறையை ஏவுவது, அவதூறு பரப்புவது.  போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றது. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹரியானாவில் போலில் அடக்குமுறைக்கு ஒரு விவசாயி மரணமடைந்துள்ளார். ஹரியானா மாநில காவல் துறைக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டனத்தை பதிவு செய்கின்றோம். நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டத்திற்கு அதரவு திரட்டும் வகையில் வரும் செப்டம்பர் 25ம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்பு குழு அழைப்பு விடுத்துள்ளது.




தமிழக முதல்வரை சந்தித்து இந்த போராட்டத்திற்கு திமுக சார்பில் ஆதரவு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவர் நிர்வாகிகளிடம் கலந்து பேசி பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் விவசாயிகளுக்கு அதரவாக செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு வழங்கிட வேண்டும் என்றார்