1. மாங்காட்டில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்து 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
2. அம்பத்தூா் ரயில்நிலையத்தில் விரைவு ரயில் பாதை அருகே ரயில் முன் பாய்ந்து, காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனா். சென்னை-அரக்கோணம் விரைவு பாதையில் வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனா். இது குறித்து அம்பத்தூா் ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
3. சென்னை மாநகரை தூய்மையாகப் பராமரிப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைத் திட்டங்கள் வரவேற்கப்படுவதுடன், சிறந்த திட்டத்துக்கு முதல் பரிசாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
4. சென்னை, போரூர் அருகே, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில், காரில் இருந்த இரண்டு பேர் பலியாகினர்.
5. சென்னை கீழ்ப்பாக்கம் அருகே ஆயுதப்படை காவலர் சாதிக் பாட்ஷா தூக்கிட்டு தற்கொலை குறித்து போலீசார் விசாரணை.
6. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 95 பள்ளிகளில் உள்ள பழைய கட்டடங்களை உடனடியாக இடிக்க உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்தாா். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பழுதடைந்த 196 கட்டிடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
7. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஏலச்சீட்டு நடத்தி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து 28 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
8. பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த பாலியல் புகார் குறித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
9. காஞ்சிபுரம் செவிலிமேடு மேட்டுக் காலனி பகுதியை சோந்த பெண்கள் சீராக குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
10. ஃபாக்ஸ்கான் என்ற செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை பெண் ஊழியர்கள் தங்கியிருந்த விடுதியில் வழங்கப்பட்ட உணவில் நச்சுத்தன்மை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 159 பெண் ஊழியர்களில் 9 பேர் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய யூ-டியூபர் 'சாட்டை' துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என, பூந்தமல்லி வட்டாட்சியர் சங்கர் திருவள்ளூர் தாலுக்கா போலீஸில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார்,'சாட்டை' துரைமுருகன் மீது வன்முறையைதூண்டுதல், அவதூறு செய்தி பரப்புதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்து, நேற்று முன்தினம் இரவு, திருச்சிசண்முகா நகரில் உள்ள அவரது வீட்டில்இருந்து கைது செய்து, திருவள்ளூர் ஜே.எம்-1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.