விழிப்புணர்வு தாக்கம்

Continues below advertisement

சென்னை பெருநகரம் முழுவதும் சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு ,  அதிகப்படியாக போக்குவரத்து அமலாக்க பணிகள், ரோந்து பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்கவும், பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தவும் , சாலைப் பாதுகாப்பு குறித்து கற்பித்து, பொதுமக்களை வலியுறுத்துவதன் மூலம், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் சாலைப் பயனர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் விழிப்புணர்வை உருவாக்கி வருகின்றனர்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து, விபத்துக்களைக் குறைப்பதற்கான தொழில்நுட்ப அணுகுமுறைகள் குறித்து காவல் துறையினருக்கு பல பயிற்சித் திட்டங்களையும், பள்ளி குழந்தைகள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் விநியோக முகவர்கள் போன்றவர்களுக்கான சாலை பாதுகாப்புக் கல்வித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

Continues below advertisement

தொழில் நுட்ப உதவிகள்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர், விழிப்புணர்வு பிரச்சாரங்களுடன் கூடுதலாக, சென்னை பெருநகரம் முழுவதும் காவலரின் சோதனைகள் மற்றும் ANPR கேமராக்கள், 2D - வேக ரேடார் அமைப்பு மற்றும் இண்டர் செப்டார் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் அமைப்பு போன்ற தொழில்நுட்ப முயற்சிகள் மூலம் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் , வேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றிற்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைப் பதிவு செய்வதன் மூலம் அதன் அமலாக்க உத்தியை வலுப்படுத்தியுள்ளது.

மேலும், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் சாலை தன்மைகளை மேம்படுத்துதல், அறிவிப்பு பலகைகள் மற்றும் ஒளிரும் விளக்குகளை மேம்படுத்துவதன் மூலமும் விபத்து ஏற்படக்கூடிய இடங்களை பயனாலர்கள் எளிதில் கண்டறிய உதவுகிறது. இந்த கூட்டு முயற்சிகளின் மூலம் சென்னை பெருநகரில் கடந்த ஆண்டை விட விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை கணிசமாக குறைத்துள்ளன.

2024 உடன் ஒப்பிடும்போது 03.08.2025 அன்றைய நிலவரப்படி இவ்வாண்டில் (2025) சாலை விபத்து இறப்புகள் 12% குறைந்துள்ளன. கடந்த ஆண்டு 03.08.2024 வரை 316 உயிரிழப்புகள் நிகழ்ந்தது. இவ்வாண்டு அதே தேதி வரை ஒப்பிட்டு பார்க்கும் போது 278 உயிரிழப்புகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. விபத்துகளைக் குறைப்பதற்கும் சாலை பாதுகாப்பின் முன்னுரிமையை அதிகபட்சமாக உறுதி செய்வதற்கும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் முயற்சிகள் தொடரும்.