தமிழ்நாட்டில், கடந்த மாதம் அக்டோபர் 29-ஆம் தேதி தொடங்கி வட கிழக்கு பருவமழையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நவம்பர் 7ஆம் தேதி வரை மழை தொடரும் என்றும், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு 


தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை


செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (4.11.2022) பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


சென்னை


இந்நிலையில், கனமழை காரணமாக இன்று சென்னை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட நிர்வாகம் முன்னதாக அறிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை மறுநாளும் (நவ.05) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கன மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு (04.11.2022) மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்  லலிதா உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது


 



சென்னையில் நேற்று மதியம் சற்றே மழை ஓய்ந்திருந்தது. ஆனால் நேற்று மாலை தொடங்கி ஆயிரம் விளக்கு, நந்தனம், எழும்பூர், விமானநிலையம், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அம்பத்தூரி, கொடுங்கையூர், முகப்பேர், அயனாவரம், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், சோழிங்க நல்லூர், பல்லாவரம், தாம்பரம், ஓ.எம்.ஆர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக கனமழை பெய்யத் தொடங்கியது.


04.11.2022:  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்,  புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம்,  கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.


05.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.



06.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


07.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.