கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து வந்திருந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் இன்று மாலை நேரத்தில் திடிரென கருமேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரவில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. 



காஞ்சிபுரம், ஓரிக்கை, செவிலிமேடு,  வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.  இதனால் ஏரிகள் நிறைந்த மாவட்டத்தில் நீர் நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் உயரும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி.   இரவு நேரத்தில் பெய்த மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதுமாக குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.

 



தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,  இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


02.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 


03.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 


04.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


05.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: 


அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இருப்பினும் சென்னையில் நேற்று  முதல் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.




இன்று காலை நிலவரப்படி தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பதிவான மழையின் அளவு (மில்லி மீட்டரில்): அதிராமபட்டினம் 153.0 மி.மீ, கடலூர் 93.0 மி.மீ,  வால்பாறை 78.0 மி.மீ, புதுச்சேரி 69.0 மி.மீ, பாம்பன் 59.0 மி.மீ, கன்னியாகுமரி 54.0 மி.மீ, பாளையம்கோட்டை 47.0 மி.மீ, சேலம் 42.0 மி.மீ, மீனம்பாக்கம் 38.2 மி.மீ, நுங்கம்பாக்கம் 32.1 மி.மீ, திருச்சிராப்பள்ளி 30.0 மி.மீ, திருப்பத்தூர் 15.0 மி.மீ, கொடைக்கானல் 14.0 மி.மீ, கோவை 11.0 மி.மீ, ஊட்டி 14.0 மி.மீ, நாகப்பட்டினம் 6.0 மி.மீ, டோண்டி 5.0 மி.மீ, குன்னூர் 3.0 மி.மீ, அரியலூர் 1.2 மி.மீ, கரூர் பரமத்தி 1.0 மி.மீ, காரைக்கால் 2.0 மி.மீ, வேலூர் 0.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.