madden Julian oscilation காரணமாக தமிழகத்தில் வரும் நாட்களில் கன மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.  இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ம் தேதி வடதமிழகம்- புதுவை,   மற்றும் அதனை ஒட்டிய  தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும்.


கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு  காரணமாக தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்யும் எனவும், வரும் 7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 


இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து சுவாரசியமான அப்டேட் பதிவிட்டுள்ளார்.



நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி சக்கரம் என பெயர் சூட்டப்படலாம் என தெரிவித்துள்ளார். மேலும் madden Julian oscilation காரணமாக தமிழகத்தில் வரும் நாட்களில் மழை இருக்கும், நவம்பர் மாதம் குறைந்த அளவு மழை பதிவாகி இருந்தாலும் mjo கிங் மேக்கராக இருக்கும் அதாவது நிச்சயம் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.


இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் ஆனால் பெரும்பாலும் இந்த புயல் கடல் பகுதியில் இருக்கும், இந்த புயல் நிலப்பகுதியை அடையும் போது அதன் மையத்தை நோக்கி வறண்ட காற்று செல்லும், இதனால் டெல்டா தொடங்கி நெல்லூர் வரை உள்ள பகுதிகளில் மழைக்கான ஹாட் ஸ்பாட்டாக இருக்கப்போகிறது. நவம்பர் மாதம்  20-25 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி போல் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மழையை கொடுக்காமல் போகாது. நிச்சயம் நல்ல மழை இருக்கும் என்றும் இறுதியாக இது அனைத்தும் கணிக்கப்பட்டவையே, காற்ற்ழுத்த தாழ்வு பகுதி உருவான பின்னரே நிச்சயமாக கூற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.


இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்: 


தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் வரும் 5 ஆம் தேதி ஒரு  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது டிசம்பர் 07 ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடலில்  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, டிசம்பர் 8 ஆம் தேதி  மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு பாலுச்சேரி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதி மற்றும் ஆந்திரப் பகுதிக்கு வர வாய்ப்புள்ளது.


தமிழகம் புதுச்சேரி மற்றும் அதை ஒட்டியுள்ள ஆந்திரப் பிரதேசத்தில் டிசம்பர் 7 ஆம் தேதி  அன்று கனமழை முதல் மிக கனமழையுடன் பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.