புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில்  அமைத்தல் திட்டத்தினில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/ மகளிருக்கு 60% மானியம்  வழங்கப்படவுள்ளது. புதிய மீன்வளர்ப்பு குளங்கள் ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில்  அமைத்தல் திட்டத்தினில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம்  வழங்கப்படவுள்ளது.


நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களில் ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில்  மீன்வளர்த்திட உள்ளீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம்  வழங்கப்படவுள்ளது. சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில்  மீன்வளர்த்திட ஒரு ஹெக்டேருக்கு பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம்  வழங்கப்படவுள்ளது.


நன்னீர் மீன்வளர்ப்பிற்கான நடுத்தர அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தினில் ஒரு அலகிற்கான  ரூ.14.00 இலட்சம் செலவினத்தில் பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் மற்றும்  ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியம்  வழங்கப்படவுள்ளது. ஒருங்கிணைந்த அலங்கார மீன்வளர்ப்பு  அலகு (நன்னீர் மீன்களை இனப்பெருக்கம்  மற்றும் வளர்த்தல்) ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில்  அமைத்தல் திட்டத்தினில் ஒரு அலகிற்கு பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு பிரிவினருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.


கொல்லைப்புற அலங்கார மீன்வளர்ப்பு அலகு ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில்  அமைத்தல் திட்டத்தினில் ஒரு அலகிற்கு பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு பிரிவினருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது. மீன்விற்பனை அங்காடி (அலங்கார மீன்வளர்ப்பு/மீன் அருங்காட்சியகம் ஆகியவை உள்ளடங்கியது) ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில்  அமைத்தல் திட்டத்தினில் பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு பிரிவினருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.


குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் வாங்கிடும் திட்டத்தினில் ஒரு அலகிற்கு பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு பிரிவினருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.  குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய மூன்று சக்கர வாகனம் வழங்கும்  திட்டத்தினில்  ரூ.3.00 இலட்சம்  மதிப்பீட்டில் ஒரு அலகிற்கு பொது பிரிவினருக்கு 40% மானியம்    மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியம்  வழங்கப்படவுள்ளது. குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம்  ரூ.73,721/- மதிப்பீட்டில் வாங்கிடும் திட்டத்தினில் ஒரு அலகிற்கு பொது பிரிவினருக்கு 40% மானியம்    மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியம்  வழங்கப்படவுள்ளது.  


பயோபிளாக் குளங்களில் உவர்நீர் இறால் வளர்த்தல் திட்டத்தினில் ஒரு அலகிற்கான  ரூ.18.00 இலட்சம் செலவினத்தில் பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் மற்றும்  மகளிர்/ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியம்  வழங்கப்படவுள்ளது.கடற்பாசி வளர்த்தல்/கடல் ஆளி வளர்த்தல் திட்டத்தினில் ஒரு அலகிற்கான  செலவினத்தில் பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் மற்றும்  மகளிர்/ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியம்  வழங்கப்படவுள்ளது. கூண்டுகளில் கடல் மீன்கள் வளர்க்கும் திட்டத்தினில் ஒரு அலகிற்கான ரூ.5.00 இலட்சம் செலவினத்தில் பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் மற்றும்  மகளிர்/ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியம்  வழங்கப்படவுள்ளது.  


பாரம்பரிய மீனவர்களுக்கு படகு வலை எஞ்சின் மற்றும் குளிர்காப்பு பெட்டி வழங்குதல் திட்டத்தினில் ஒரு அலகிற்கான ரூ.5.00 இலட்சம் செலவினத்தில் பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் மற்றும்  மகளிர் பிரிவினருக்கு 60% மானியம்  வழங்கப்படவுள்ளது. பனிகட்டி உற்பத்தி நிலையம் அமைத்தல் (10 டன்) திட்டத்தினில் ஒரு அலகிற்கான ரூ.40.00 இலட்சம் செலவினத்தில் பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் மற்றும்  மகளிர்/ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியம்  வழங்கப்படவுள்ளது.  


பனிகட்டி உற்பத்தி நிலையம் அமைத்தல் (20 டன்) திட்டத்தினில் ஒரு அலகிற்கான ரூ.80.00 இலட்சம் செலவினத்தில் பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் மற்றும்  மகளிர்/ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியம்  வழங்கப்படவுள்ளது.   மீன்தீவன உற்பத்தி நிலையம் அமைத்தல் (20 டன்) திட்டத்தினில் ஒரு அலகிற்கான ரூ.200.00 இலட்சம் செலவினத்தில் பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் வழங்கப்படவுள்ளது. ரூ.25.00 இலட்சம்  மதிப்பீட்டில் நோய் கண்டறிதல் மற்றும் தர பரிசோதனை ஆய்வகங்கள் நிறுவிட ஒரு அலகிற்கு பொது பிரிவினருக்கு 40% மானியம்    மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியம்  வழங்கப்படவுள்ளத .எனவே, இத்திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் "காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்1/269, கிழக்கு கடற்கரை சாலை, சின்ன நீலாங்கரை, சென்னை 600 115 (கைப்பேசி எண்.99762 29961)" அலுவலகத்தை தொடர்பு கொண்டு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.