படப்பை அருகே பெண் ஊழியருக்கு நேர்ந்த கொடூரம் ! பேருந்து நிறுத்தத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம். குற்றவாளிகள் கைது

Continues below advertisement

சென்னை படப்பை அடுத்த சாலமங்கலத்தை சேர்ந்த 28 வயது பெண், மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், கடந்த 24ம் தேதி இரவு , பணியை முடித்து விட்டு , சாலமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தனது வீட்டிற்கு தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் அந்த பெண்ணை தொட்டு சில்மிஷம் செய்து ஆபாசமாக பேசி தப்பி சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததையடுத்து படப்பை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் சில்மிஷம் செய்தது ஒரகடத்தில் தங்கி கார் ஓட்டுநராக பணியாற்றும் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் ( வயது 21 ) வந்த வாசியை சேர்ந்த ரகு ( வயது 32 ) என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Continues below advertisement

பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பேருந்து ஒப்பந்த ஓட்டுநர் கைது

உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மன்னன் குடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் ( வயது 40 ). உத்திர மேரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் , ஒப்பந்த ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் உள்ள வீடு ஒன்றில் , தனியாக படுத்து உறங்கி கொண்டிருந்த 45 வயது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பெண்ணின் உறவினர்கள் சம்பவம் புகார் அளித்தனர். உத்திரமேரூர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து உத்திரமேரூர் போலீசார், பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

அரசு பேருந்து மோதிய விபத்தில் , பைக்கில் சென்ற இளைஞர் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் கீர்த்திவாசன் நல்லாட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கீர்த்திவாசன் ( வயது 25 ) ஸ்ரீபெரும்புதுாரில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இருசக்கர வாகனத்தில் சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக, வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

ரகுநாதபுரம் அருகே , சென்னை திருப்பதி நோக்கி சென்ற தடம் எண் '201' என்ற அரசு பேருந்து , முன்னே சென்ற கீர்த்திவாசனின் வாகனத்தின் மீது மோதியது. இதில் பேருந்தின் அடியில் பைக் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதால், பைக்கின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுநர் மற்றும் பயணியர் எரிந்து கொண்டிருந்த பைக்கை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். படுகாயமடைந்த கீர்த்திவாசனை , திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்களின் பரிசோதனையில் கீர்த்திவாசன் உயிரிழந்தது தெரிய வந்தது.