ரூ.8 லட்சம் மின்கட்டணத்தை பார்த்து அதிர்ந்த குடும்பம்

Continues below advertisement

சென்னை பாடி திருவல்லீஸ்வரர் நகரில் வசித்து வருபவர் மூதாட்டி ராணி. இவரது வீட்டிற்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சராசரியாக 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை மின்கட்டணம் வருவது வழக்கம். இந்த மாத கணக்கீட்டின் படி 73024  யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதற்காக 8 லட்சத்து 38 ஆயிரத்து 747 ரூபாய் மின் கட்டணம் என தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராணியின் மகள் மணிமேகலை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார்.

கோவிலுக்கு ரூ. 1 லட்சம் மின்கட்டணம்

Continues below advertisement

சென்னை பாடி திருவலீஸ்வரர் நகரில் வெற்றி விநாயகர் ஆலயத்திற்கு மின் கட்டணமாக ஒரு லட்சம் ரூபாயும் , ஜெகதாம்பிகை தெருவில் உள்ள சீனிவாசன் என்பவருக்கு ஒரு லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மின்கட்டணமும் இந்த மாதம் வந்துள்ளது.

தொடர்ச்சியாக பாடி திருவலீஸ்வரர் நகரில் உள்ள மக்களுக்கு மின் கட்டணம் இலட்சக்கணக்கில் வருவதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தவுடன் அச்சத்தில் உள்ளனர். மேலும் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.

அதிக மின்கட்டணம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராணியின் மகள் மணிமேகலை ;

ஒவ்வொரு மாதமும் வருவது போல அதிகாரிகள் மின் பயன்பாட்டை ரீடிங் எடுத்துச் சென்றனர். பின்னர் என்னுடைய தொலைபேசி எண்ணிற்கு 8,38,747 ரூபாய் கட்ட வேண்டுமென குறுஞ்செய்தி வந்தது பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்து எனது மகன் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தேன்.

கடன் வாங்கி EB பில் செலுத்தினேன்

அதிக தொகை வருவது இது முதன்முறை அல்ல என்றும் , கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மின் கட்டணமாக 25 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. இது தொடர்பாக திருமங்கலத்தில் உள்ள மின் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருந்தேன். புகாரை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் மின்கட்டணத்தில் பாதி தொகையை மற்றும் கட்டினால் போதும் என தெரிவித்ததால் கடன் வாங்கி தொகையை செலுத்தினேன். இந்த மாதம் 8 லட்சத்திற்கும் மேலாக மின்கட்டணம் வந்துள்ளது எங்கள் குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது என தெரிவித்தார். 

தவறுதலாக கணக்கீடு - பணியிடை நீக்கம்

ரூ. 8 லட்சத்து 38 ஆயிரம் மின் கட்டணம் தொடர்பான புகாருக்கு திருமங்கலம் மேற்பார்வை பொறியாளர் சித்ரா சௌந்தரபாண்டியனிடம் கேட்கும் பொழுது திருவலிஸ்வரர் நகர் பகுதியில் மின் பயன்பாடு கணக்கு எடுக்கும் ஊழியர் தவறுதலாக மின் பயன்பாட்டு அளவை எழுதி உள்ளதாகவும் மின் ஊழியரை பணியிடை நீக்கம் செய்து உரிய விளக்கம் கேட்டுள்ளதாகவும் , இனிவரும் நாட்களில் மின் கணக்கீடு தொடர்பான எந்த புகாரும் வராமல் நடவணிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார் என்று தெரிவித்தார்.