சென்னை புறநகர் ரயில் சேவை என்பது மிக முக்கிய சேவைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை கடற்கரையிலிருந்து, தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில்களில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

Continues below advertisement


இந்த ரயில் தடம் சென்னை புறநகர் பகுதி மற்றும் சென்னையில் நகர் பகுதியில், இணைக்கக்கூடிய மிக முக்கிய ரயில் தடமாக இருந்து வருகிறது. எனவே நாள்தோறும் பணி நிமித்தமாகவும், கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் இந்த ரயில் தடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டால், பயணிகள் மிகுந்த அவதி அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில நேரங்களில் பராமரிப்பு பணிக்காக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டால், இதுகுறித்து உடனடியாக பயணிகளுக்கு தெரிவிக்கப்படும். 


சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில்கள் ரத்து - Chennai beach - Chengalpattu Train cancelled


அந்த வகையில் செங்கல்பட்டு பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று காலை 11:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை ரயில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளது. இதனால் சென்னை கடற்கரை -செங்கல்பட்டியிலேயே 12 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம் (Chengalpattu train cancelled details)


சென்னை கடற்கரையில் இருந்து காலை 7:27 மணிக்கு செங்கல்பட்டு வழியாக திருமால்பூர் செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது. 


செங்கல்பட்டில் இருந்து காலை 11:05 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.


செங்கல்பட்டில் இருந்து காலை 11:30 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது


செங்கல்பட்டில் இருந்து பகல் 12 மணி மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.


செங்கல்பட்டில் இருந்து மதியம் 1:10 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.


செங்கல்பட்டில் இருந்து மதியம் 1:45 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.


செங்கல்பட்டில் இருந்து மதியம் 2:20 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.


திருமால்பூரில் இருந்து காஞ்சிபுரம் செங்கல்பட்டு வழியாக காலை 11:05 மணிக்கு செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.


சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 9:31 மணிக்கு செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.


சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 9:51 மணிக்கு செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.


சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 10:56 மணிக்கு செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.


சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11:04 மணிக்கு செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.


சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு பகல் 12:25 மணிக்கு செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.


சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - Special Trains  From Singaperumal Kovil station


சென்னை கடற்கரையிலிருந்து சிங்கப்பெருமாள் கோவில் வரையும், சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து சென்னை கடற்கரை வரையும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் அதற்கேற்றவாறு திட்டமிட்டு கொள்ளுமாறு, ரயில்வே துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.