டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து சென்னையின் முக்கிய இடங்களில் பாதுக்காப்பு அதிகரிக்கப்பட்டு தீவிர வாகன சோதனையை போலீசார் நடத்தி வருகின்றனர். 

Continues below advertisement


டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்: 


டெல்லி செங்கோட்டை அருகே இன்று மாலை 06.52 மணி அளவில் கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியது.  இந்த வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 20-க்கும் மேற்ப்பட்டோர்  காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில், என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 


 


மேலும் சம்பவம் குறித்த முதல் தகவலை டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.இன்று மாலை 6.52 மணியளவில், மெதுவாகச் சென்ற கார் ஒன்று சிக்னல் அருகே போய் நின்றது.  அப்போது தான் காரிலிருந்த குண்டானது வெடித்துள்ளது,, மேலும் குண்டுவெடிப்பு காரணமாக, அருகிலுள்ள வாகனங்களும் சேதமடைந்தாகவும் தெரிவித்தனர். 


உஷார் நிலையில் சென்னை: 


இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து  நாடு முழுவதும் பாதுக்காப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பாதுக்காப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான ரயில் நிலையம், விமான நிலையம், ஷாப்பிங் மால்கள், பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே மக்களை உள்ளே அனுமதிக்கின்றனர். மேலும் சென்னையின் பிரதான சாலைகளில் தீவிர வாகன சோதனையையும் போலீசார் மேற்க்கொண்டு வருகின்றனர்.


சென்னை மட்டுமின்றி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதல்வர் இரங்கல்:


இந்த நிகழ்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல் பதிவில் “ டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த குண்டுவெடிப்பில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் உண்மையிலேயே மனதை உடைக்கின்றன.






உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயங்களுடன் போராடுபவர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. அவர்கள் விரைவில் குணமடையவும், அவர்கள் வலிமை பெறவும் வேண்டிக்கொள்கிறேன் என்றார்