இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ள நிலையில் தமிழக்த்திற்கு மழை பாதிப்பு இருக்காது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்


கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய அரபிக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் 12 கிமீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்தது.


இது லட்சத்தீவிற்கு மேற்கு-வடமேற்காக 850 கிமீ தொலைவிலும், கோவவிற்கு மேற்கே 950 கிமீ தொலைவில் மற்றும் ஒமனுக்கு தென்கிழக்கே 1220 கிமீ தொலைவில் இது அடுத்த 12 மணி நேரத்தில் கிட்டத்தட்ட மேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. அதன் பிறகு, அது மேற்கு-தென்மேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கும்.


மீனவர்கள் எச்சரிக்கை:


மீனவர்கள் டிசம்பர் 17 ஆம் தேதி காலை வரை கிழக்கு மத்திய அரபிக்கடலுக்கும், டிசம்பர் 17 ஆம் தேதி வரை மேற்கு மத்திய மற்றும் தென்மேற்கு அரபிக்கடலுக்கும் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடலில் நிலை கொண்டுள்ள  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடலில் அதே பகுதியில் நீடிக்கிறது. 


இது மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு வங்க கடலில் 17 டிசம்பர காலை வரை அதன் தீவிரத்தை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,


 18.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.


19.12.2022: தமிழ்நாடு,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்:  16.12.2022 : சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: 16.12.2022 & 17.12.2022  : சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் :  காற்றின் வேகம் படிப்படியாக  குறைந்து 16.12.2022 காலை  வரை   மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு  காற்றின் வேகம் மீண்டும் குறைந்து  17.12.2022 காலை  வரை   மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள் :    இன்று மதியம் வரை காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  அதன் பிறகு  காற்றின் வேகம் மீண்டும் குறைந்து  17.12.2022 காலை  வரை   மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள் :  காற்றின் வேகம் படிப்படியாக  உயர்ந்து 16.12.2022 காலை முதல் 17.12.2022 காலை வரை  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு  காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.


மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.