புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பேருந்துகள் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. தொடர் மழையால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று இரவு முதல் தற்போது வரை சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது, இதனால் ஓஎம்ஆர் சாலையில் தனியார் கல்லூரி எதிரே இடுப்பு அளவிற்கு மழைநீர் சூழ்ந்துள்ளது இதனால் வாகன ஓட்டிகள் தத்தி தழுவி ஆபத்துடன் பயணிக்கின்றனர்.
கடந்த 2015 வர்தா புயலின் போது கேளம்பாக்கம் டு திருப்போரூர் ஓஎம்ஆர் சாலை முழுமையாக தாம்பித்தது இதனால் ஓ எம் ஆர் சாலை முழுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதே போன்று தற்போது பொய்து வரும் கனமழையால் ஓ எம் ஆர் சாலை முழுதும் கடல் போல் காட்சி அளிக்கிறது வாகனங்கள் தவழ்ந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இரவு முதல் தற்போது வரை கொட்டி தீர்த்து வரும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால்
தையூர் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் நிலையில் ஓ எம் ஆர் சாலையில் கடல் போல் காட்சி அளிக்கிறது வாகனங்கள் செல்ல தடை தடை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.. காலவாக்கம் தனியார் கல்லூரி அருகிலும் அதே போன்று தையூர் விஜயசாந்தி குடியிருப்பு அருகிலும் ஓ எம் ஆர் சாலையில் மழை கடல் நீர் கடல் போல் தேங்கியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு கொள் மறைந்திருக்கும் கார் போன்ற வாகனங்களை ஓஎம்ஆர் சாலையில் அணிவித்து நிற்கவைக்கப்பட்டுள்ளனர் இதனால் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.