Cyclone Michaung: மிக்ஜாம் புயல் சென்னையை கடந்திருந்தாலும் சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கான மீட்பு பணிகள் தமிழ்நாடு அரசு மற்றும் மாநகராட்சி சார்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.
புயலின் காரணமாக சென்னை முழுவதும் நேற்று அதாவது டிசம்பர் 4ஆம் தேதி சென்னை முழுவதும் ஒட்டுமொத்தமாக மின்சாரம் முன் எச்சரிக்கையாக நிறுத்தப்பட்டது. புயல் சென்னையை கடந்த பின்னர் படிப்படியாக நிலமையை ஆராய்ந்து மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். இந்நிலையில் சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ள இடங்கள் குறித்து தமிழ்நாடு மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி,
சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஜெ.ஜெ. நகர், சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு, SAF Games village, ஸ்பார்ட்டன் நகர், கலெக்டர் நகர், குமரன் நகர், மூர்த்தி நகர், சர்ச் சாலை, அடையாளம்பட்டு, S & P பொன்னியம்மன் நகருக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை மத்திய மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அண்ணா சாலை, கிரிம்ஸ் ரோடு, நுகம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா, பூக்கடை சிந்தாதிரிப்பேட்டை, லஸ், இராயப்பேட்டை, மேற்கு மாம்பலம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய பகுதிகள், சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட CMBTT, ICF, இந்தியா பிஸ்டன். கீழ்பாக்கம், மணலி, நியூகொளத்தூர், பேப்பர்மில்ஸ் ரோடு, பெரியார் நகர் ஆகிய பகுதிகள், சென்னை தெற்கு 1 மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஆழ்வார் திருநகரின் ஒரு பகுதி, கிண்டி, இராமாபுரம், இராமசாமி சாலை, செயின்ட் தாமஸ் மவுண்ட், வடபழனி, கெருகம்பாக்கம், போரூர் ஒரு பகுதி மற்றும் சென்னை தெற்கு- || மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர், அடையாறு. வேளச்சேரி, திருவான்மியூர், தொட்டியம்பாக்கம், கடப்பேரி ஆகியவற்றின் ஒரு பகுதி என சென்னையின் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் மற்ற பகுதிகளிலும் மின்சாரம் வழங்க மின்வாரிய ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.