கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் ஊராட்சி பூதங்கட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நீண்ட நாள் ஊரடங்குக்கு பிறகு தற்பொழுது கடந்த ஒன்றாம் தேதி முதல் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை வழக்கம்போல் அங்கன்வாடி மையத்திர்க்கு அங்கு பயிலும் 20 குழந்தைகளும் மதியம் அங்கன்வாடி மையத்திற்கு சென்று மதிய உணவை சாப்பிட்டனர். இதற்கிடையே உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் உணவு உண்ட குழந்தைகள் அடுத்து அடுத்து வாந்தி எடுத்தனர். இதற்கிடையே உணவு பரிமாறிய ஊழியர்கள் சாப்பாட்டை பார்த்தபோது அதில் பள்ளி விழுந்திருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கன்வாடி மைய ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் 17 குழந்தைகளையும் சிகிச்சைக்காக முதலில் திருச்சோபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு அவர்கள் சிகிச்சை செய்வதற்கான வசதிகள் இல்லாததால் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் பின் அங்கிருந்து குழந்தைகளை அதே ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்களால் முதலுதவி அளிக்கப்பட்டு, பின் வாந்தி அதிகமாக வந்த இரண்டு குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இந்த தகவல் அறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.
பின் அங்கிருந்த குழந்தைகளின் பெற்றோர்களிடம் விசாரிக்கையில் அவர்கள் பூதங்கட்டி கிராமத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம் சுகாதாரமாக செயல்படவில்லை மற்றும் அங்கு பணி புரியும் ஊழியர்களிடம் இதுகுறித்து கூறினாலும் அவர்கள் அதற்கான நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள், இது மட்டுமின்றி அங்கு தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க விருப்பமில்லை என்றாலும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தங்களது பிள்ளைகளை அழைத்து சென்று அங்கு படிக்க வைக்கிறார்கள் என குற்றம் சாட்டினர். இந்த நிலையில் தகவல் அறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்புரமணியம் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறி பின்னர் மருத்துவர்களிடம் குழந்தைகளின் உடல்நிலை குறித்து விசாரித்தார் மேலும் அங்கன்வாடி பணியாளர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் பாலசுப்பிரமணியம், இவ்வாறு குழந்தைகள் பாதிக்கும் அளவிற்கு அலட்சியமாக செயல்பபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்றும் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் நலமாக உள்ளனர் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களது உடல்நிலையை ஒரு நாள் முழுவதும் பார்த்துவிட்டு பின் வீடு திரும்புவார்கள் பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம் என கேட்டுகொண்டார். இந்த நிலையில் அலட்சியமாக செயல்பபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டு இருந்தார் அதன்படி அங்கன்வாடியின் அமைப்பாளர் ஜெயசித்ரா மற்றும் உதவியாளர் அம்சவள்ளி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.