சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் கைது

Continues below advertisement


சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி , தன் வீட்டின் மாடியில் மொபைல் போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் 61 வயது முதியவர் ஜெயராம் , சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த புகாரில் செம்பியம் மகளிர் போலீ சார் போக்சோ வழக்கு பதிந்து ஜெயராமை கைது செய்தனர்.


கைகலப்பில் முடிந்த சமாதான பேச்சு வார்த்தை - ரவுடிக்கு அரிவாள் வெட்டு


சென்னை கொளத்துார் பெரியார் நகர், பூம்புகார் நகர் முதல் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மிதுன் ( வயது 24 )  ரவுடியாக வலம் வரும் இவர் மீது இரண்டு வழக்குகள் உள்ளன. இவரது நண்பரான, பெரம்பூரைச் சேர்ந்த முகமது அப்ரோஸ் ( வயது 24 ) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முகமது இம்ரான் ( வயது 24 ) மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.


ரவுடி மிதுன் , தனது கூட்டாளிகளுடன் சென்று அப்ரோசுக்கு சாதகமாக , முகமது இம்ரானிடம் பேச்சில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கை கலப்பாக மாறியுள்ளது. இதில் முகமது இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகளான உமர் ( வயது 19 ) சலீ முல்லா ( வயது 22 )  அக்ரம்கான் ( வயது 23 ) அமர் ( வயது 18 )  லிங்கேஸ்வரன் ( வயது 21 ) உட்பட சிலர் ரவுடி மிதுனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.


பலத்த காயத்துடன் ரவுடி மிதுன் அருகே உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முகமது இம்ரான் தரப்பில் தலையில் காயமடைந்த லிங்கேஷ்வரனும் , அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திரு.வி.க நகர் போலீசார் வழக்கு பதிந்து, முகமது இம்ரான், உமர், சலீமுல்லா, அக்ரம்கான், மற்றும் மிதுன் தரப்பில் வசந்த் ஆகியோரை கைது செய்து தலைமறைவாக உள்ளவர்களை தேடுகின்றனர்.


கஞ்சா விற்ற 17 வயது சிறுவன் கைது


சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 17 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் ஒடிசாவில் இருந்து தன் சகோதரருடன் சேர்ந்து கஞ்சா வாங்கி வந்து சென்னையில் விற்று வருவது தெரிந்தது. அவனிடம் இருந்து 127 போதை மாத்திரைகள், 4 கிலோ கஞ்சா மற்றும் 450 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கீழ்ப் பாக்கம் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர் திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். அவரது சகோதரரை தேடி வருகின்றனர்.


போலீஸ் எனக் கூறி , வியாபாரியிடம் 55 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்த கும்பல்


சென்னை சவுகார்பேட்டை வரதமுத்தையப்பன் தெருவைச் சேர்ந்தவர் நரேஷ் ( வயது 38 ) இவர் ஐக்கிய அரபு எமிரேட் ஸின் துபாய் நகரில் இருந்து. முஜீப் என்ற ஏஜன்ட் மூலம் லேப்டாப் வாங்கி விற்கும் வேலை செய்து வருகிறார். அண்ணா சாலையில் லேப்டாப் விற்பனை செய்யும் கடையும் வைத்துள்ளார். இந்த நிலையில் முஜீப்பின் ஏஜன்டிடம் கொடுப்பதற்காக 55 லட்சம் ரூபாயுடன் , வடக்கு கடற்கரை சாலை தபால் நிலையம் அருகே நரேஷ் நின்றிருந்தார்.


நீண்ட நேரமாகியும் ஏஜன்ட் வராததால் பணத்துடன் கோட்டை ரயில் நிலையம் முத்துசாமி பாலம் வழியாக இருசக்கர வாகனத்தில் நரேஷ் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது , அவரை பைக்கில் பின் தொடர்ந்த இருவர் தாங்கள் போலீஸ் என்றும் , உங்களிடம் விசாரிக்க வேண்டும் எனவும் கூறி , அவரை பைக்கில் அழைத்து சென்றுள்ளனர்.


சிறிது துாரத்தில் இருவரும் பைக்கை நிறுத்தியுள்ளனர். பின் அங்கு நின்றிருந்த இருவருடன் நரேஷிடம் இருந்த 55 லட்சம் ரூபாய் மற்றும் பைக்கை பறித்து தப்பியுள்ளனர். இது குறித்து புகாரை அடுத்து பூக்கடை போலீசார் வழக்கு பதிந்து நான்கு பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.