CM Vijay Parandur Airport: பரந்தூர் விமான நிலைய திட்டம் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பு, விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் - விஜய்

விவசாயிகளின் நலனை கருதி பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 110 விதியின் கீழ் இந்த மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டு பேசிய போது, மாற்று இடங்களை தேர்வு செய்து சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாகவும், விரைவில் அங்கு பணிகள் தொடங்கும் என்றும் அறிவித்தார். இதனால் இந்த திட்டத்திற்கு எதிராக போராடி வந்த ஏராளமான விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல், பொருளாதார வளர்ச்சி என கூறி இயற்கை வளங்களை அழிப்பதை ஏற்க முடியாது என போராடி வந்த, சமூக ஆர்வலர்களும் தமிழ்நாடு அரசின் முடிவை பாராட்டியுள்ளனர். அதேநேரம், இந்த திட்டத்தை கைவிடுவதால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையெ, பரந்தூரில் விஜய் பேசிய பழைய வீடியோக்களும் தற்போது வைரலாகி வருகின்றன.

Continues below advertisement

விவசாயிகள் ஹாப்பி..!