Pongal: ”பொங்கலே தமிழர் விழா என கூறியவர் பெரியார்”: முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் விழா கொண்டாட்டம்.!

CM Stalin Pongal celebration: பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னை கொளத்தூர் தொகுதி மக்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் விழாவை கொண்டாடினார்.

Continues below advertisement

தமிழ்நாட்டில் வரும் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான கொளத்தூரில், அங்கு உள்ள மக்களுடன் சேர்ந்து பொங்கல் விழாவை  கொண்டாடினார். அப்போது, அங்கு உள்ள மக்களுக்கு பரிசுகளையும் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். 

Continues below advertisement

 

முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது,  கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே எனக்கு எனர்ஜி கிடைக்கிறது. கொளத்தூரையும், என்னையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதேபோன்று பொங்கலையும் திமுகவையும் பிரிக்க முடியாது. தமிழர்களுக்கான விழா என்றால், அது பொங்கல் விழா என பெரியார் கூறியுள்ளார். சாதி, மதம் என எந்த பாகுபாடும் இன்றி கொண்டாடப்படும் விழா, பொங்கல் விழா என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola