கிறிஸ்துமஸ் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட, கேரளா, தென் மாவட்ட மக்கள் பெருமளவு, விமானங்களில் பயணம் மேற்கொள்வார்கள். இதையடுத்து கேரளா உள்ளிட்ட, உள்நாட்டு விமானங்களில், பயணிகள் டிக்கெட் கட்டணம், பல மடங்கு உயர்ந்துள்ளது.

 

கிறிஸ்மஸ் பண்டிகை விடுமுறை

 

நாளை மறுநாள் திங்கட்கிழமை 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை. அதோடு சனி, ஞாயிறு என்று தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருவதால், கிறிஸ்துமஸ் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு தென் மாவட்டங்கள், மற்றும் கேரள மாநில மக்கள் அதிக அளவில், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். தென் மாவட்டம் கடுமையான மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த போதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ளவர்கள், சொந்த ஊர்களுக்கு செல்வதில் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

 

விமான பயணிகள் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு 

 

இதனால் ரயில், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு தென் மாவட்டங்களுக்கு செல்லும் சாலைகள், மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால், கார்கள், வேன்களில் பயணத்தை தவிர்த்து, விமான பயணங்களை மேற்கொண்டுள்ளனர். தென் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, கேரள மாநில மக்களும் அதிக அளவில் செல்வதால், தென் மாவட்டங்கள், மற்றும் கேரள மாநிலத்திற்கு செல்லும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம், நிரம்பி வழிகிறது.இதை அடுத்து தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்திற்கு செல்லும் விமானங்களில், விமான பயணிகள் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.

 

சென்னை- திருவந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ.2,864.

ஆனால் தற்போதைய கட்டணம் ரூ.14,065 முதல் ரூ.17,910 வரை.

 

சென்னை-கொச்சி வழக்கமான கட்டணம் ரூ.3,018.

ஆனால் தற்போது ரூ.15,661 முதல் ரூ.16,124.

 

சென்னை-கோழிக்கோடு வழக்கமான  கட்டணம் ரூ.3,734.

இப்போது கட்டணம்  ரூ.12,590 முதல் ரூ.15,552 வரை.

 

சென்னை-கண்ணூர் வழக்கமான கட்டணம் ரூ.3,519.

இப்போது கட்டணம் ரூ.11,696 முதல் ரூ.15,858 வரை.

 

சென்னை-தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.4,044.

இப்போது ரூ.10,894 முதல் ரூ.14,234.

 

சென்னை- கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,315.

இப்போது கட்டணம் ரூ.10,769 முதல் ரூ.14,769.

 

சென்னை-திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.2,579.

இப்போது கட்டணம் ரூ.5,631 முதல் ரூ.9,555 வரை.

 

சென்னை-மதுரை வழக்கமான கட்டணம் ரூ.3,314.

இப்போது கட்டணம் ரூ.10,192 முதல் ரூ.17,950 வரை.

 

இதைப்போல் பல மடங்கு விமான கட்டணங்கள் உயர்ந்தாலும், தென் மாவட்ட மற்றும் கேரள மாநில மக்கள், கிறிஸ்மஸ் பண்டிகையை, சொந்த ஊர்களில், கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில், விமானங்களில் பயணிக்கின்றனர்.