சாலையில் நடந்த சென்ற பெண்
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் சென்னை அமைந்தகரை பகுதியிலுள்ள பெண்கள் விடுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
மேற்படி பெண் கடந்த 29.06.2026 அன்று மாலை வேலை முடித்து விடுதிக்கு சூளைமேடு திருவள்ளுவர்புரம் 2வது தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த ஒரு நபர் பெண்ணை வழிமறித்து தமிழில் ஏதோ சொன்ன போது, அப்பெண்ணிற்கு புரியவில்லை என்றும் உடனே அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். நபர் மீது நடவடிக்கை எடுக்கும் படி பாதிக்கப்பட்ட பெண் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் , பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட லோகேஷ்ராஜ் ( வயது 42 ) என்பவரை 30.06.2026 அன்று கைது செய்தனர்.
விசாரணையில் லோகேஷ்ராஜ் தனியார் வணிக வளாகத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருவது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட லோகேஷ்ராஜ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்
