Chennai Wonderla: சென்னையில் புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்போரூர் அருகே இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்கா செயல்பாட்டிற்கு வரவுள்ளது. இள்ளளூரில் என்ற பகுதியில் 65 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக, பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. சுமார் 510 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
சென்னை வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பொழுது போக்கு பூங்கா டிசம்பர் இரண்டாம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் - India largest Roller Coaster
வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் உலகப் புகழ்பெற்ற Bolliger & Mabillard எனும் ரோலர் கோஸ்டர் அமைய உள்ளது. இந்த ரோலர் கோஸ்டர் இந்தியாவில் மிகப்பெரிய ரோலர் கோஸ்டராக உருவெடுத்துள்ளது. லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் இருப்பதை போன்று, ரோலர் கோஸ்டர் சென்னையிலும் அமைய உள்ளது.
இந்த ரோலர் கோஸ்டருக்கு தஞ்சாவூர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பெரிய கோவிலை குறிக்கும் வகையிலும், தமிழ்நாடு பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெறும் சவாரிகள் என்னென்ன ? What are the Rides ?
சென்னையில் அமைய உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் மொத்தம் 37 சவாரிகள் இடம் பெற உள்ளன. இவற்றில் 16 சவாரிகள் நீர் சவாரிகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக தனியாக குழந்தைகளுக்கு என பிரத்தியேகமாக 6 சவாரிகள் இடம் பெற உள்ளன.
இந்த மிகப்பெரிய பூங்காவில் ஃப்ரீ ஸ்டைல், ஸ்பின், ஸ்கை ரயில், ரெயின்போ லூப், ட்ராப் லுப், ட்ராப் ஜோன், ஸ்கை வீல், வேவ் ஃபுல், ஜீ- பால், ஒண்டர்லா பம்ப் விதவிதமான சவாரிகள் அமைய உள்ளது.
சென்னை வொண்டர்லா டிக்கெட் விலை என்ன? Chennai Wonderla Ticket Price ?
சென்னை வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில், சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு பெரியவர்களுக்கு ரூ.1489 ரூபாயும், குழந்தைகளுக்கு ரூ.1191 ரூபாயும், மூத்த குடிமக்கள் உங்களுக்கு ரூ.1117 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பெரியவர்களுக்கு ரூ.1779 ரூபாயும், சிறுவர்களுக்கு ரூ.1423 ரூபாயும், மூத்த குடிமக்களுக்கு ரூ.1334 ரூபாயும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் வாங்குவது எப்படி ? How to Book Ticket?
சென்னை வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவிற்கான டிக்கெட்டுகள் wonderla.in என்ற வெப்சைட் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பூங்காவில் இருக்கும் கவுண்டர்கள் மூலம், நேரடியாகவும் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூங்கா காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஃபர்கள் என்னென்ன? Chennai Wonderla offers ?
சென்னை வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் டிசம்பர் இரண்டாம் தேதி முதல் நாள் முதல் ரைட் செல்பவர்களுக்கு 1016 ரூபாய்க்கு டிக்கெட் கொடுக்கப்பட உள்ளது. இதேபோன்று பள்ளி மாணவர்களுக்கு என, தனி சலுகைகள் உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் பிறந்தநாள் அன்று, இலவச டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் (ஆனால் குறைந்தபட்சம் இருவர் வரவேண்டும், பிறந்தநாள் உள்ளவருக்கு மட்டும் இலவசம், மற்றோருக்கு டிக்கெட் எடுக்க வேண்டும்) என ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.