தென் மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் நகரின் பல்வேறு இடங்களில் மிதமான மழையானது பெய்து வருகிறது. 

Continues below advertisement

சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்: 

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Continues below advertisement

சென்னையில் மழை: 

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் நகரின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. 

மேலும் சென்னையில் இந்த மழையானது தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இன்று (17-11-2025) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை/ மிக கன மழை, பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (18-11-2025) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.தெரிவித்துள்ளது.