சென்னையில், அடுத்த ஒருவாரம் அதாவது நாளை முதல் வரும் 21-ம் தேதி வரையிலான வானிலை முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் எந்தெந்த நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
சென்னை வானிலை
தென் மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழ்நாட்டில் வரும் 17-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சில இடங்களில் மிதமான மழையும் பெய்துவருகிறது. இந்நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை என்ன என்பதை காண்போம்.
நவம்பர் 16, 2025
அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸ், குறைந்தபட்சம் 25–23° செல்சியஸ்.
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எச்சரிக்கை: இடி, மின்னலுடன் கூடிய மழை.
நவம்பர் 17, 2025
அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸ், குறைந்தபட்சம் 25° செல்சியஸ்.
பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை: இடி, மின்னலுடன் கூடிய கனமழை.
நவம்பர் 18, 2025
அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸ், குறைந்தபட்சம் 25° செல்சியஸ்.
வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசான முதல் மிதமான மழை, இடியுடன் கூடிய மின்னல் சம்பவங்கள் ஏற்படலாம்.
எச்சரிக்கை: ஏதும் இல்லை.
நவம்பர் 19, 2025
அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸ், குறைந்தபட்சம் 25° செல்சியஸ்.
பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
கனமழைக்கான எச்சரிக்கை இல்லை.
நவம்பர் 20, 2025
அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸ், குறைந்தபட்சம் 25° செல்சியஸ்.
பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
கனமழைக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.
நவம்பர் 21, 2025
அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸ், குறைந்தபட்சம் 25° செல்சியஸ்.
பொதுவாக, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கனமழைக்கான எச்சரிக்கை இல்லை.