Chennai Traffic Diversion: சென்னை ஓஎம்ஆர் சாலையில்  நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


போக்குவரத்து மாற்றம்:


சென்னையில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் வார நாட்களில் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு நெரிசால் அதிகமாக இருக்கும். வாகனங்கள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை காண முடியும். சாரணமாகவே இப்படி இருக்கும் நிலையில், தற்போது மெட்ரா பணிகள், சாலை விரிவாக்க பணிகள் என ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது நாளை முதல் குறிப்பிட்ட சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எந்தெந்த இடங்கள்?


ஓஎம்ஆர் சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ”ஓஎம்ஆர் சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.  இது சோதனை அடிப்படையில் 16.12.2023 முதல் செயல்படுத்தப்படும்.







  • சோழிங்கநல்லூரில் இருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படுகின்றன.

  • காமாக்ஷி மருத்துவமனை சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வரும் வாகனங்கள் பிஎஸ்ஆர் மால் அருகே இடதுபுறம் ராஜீவ் காந்தி சாலையில்) திருப்பிவிடப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாவடியில் புதிய யு டர்ன் மூலம் சோழிங்கநல்லூர் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.

  • இதேபோல், கார்ப்பரேஷன் சாலையில் இருந்து துரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சாலையில் இடதுபுறம் திருப்பப்பட்டு பெருங்குடி சுங்கச்சாவடியில் புதிய யு திருப்பத்தில் சென்று, துரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் பிற இடங்களுக்கு செல்லும். இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த மேற்கண்ட போக்குவரத்து மாற்றமானது, நாளை முதல் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டு, அதில் ஏதாவது மாற்றங்கள் தேவைப்பட்டால் அதைக் கருத்தில் கொண்டு விரைவில் நிரந்தரமாக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ பணிகள் முழுவதும் முடிந்தால் தான், இந்த சாலையில் போக்குவரத்து மீண்டும் மாற்றப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.




மேலும் படிக்க


பல்பிடுங்கிய விவகாரம்: ஏஎஸ்பி பல்வீர் சிங் உட்பட 15 பேருக்கு ஜாமீன் வழங்கியது நெல்லை நீதிமன்றம்


Kannagi Movie Review: நான்கு பெண்களின் கதை.. பெண்ணியம் பேசும் 'கண்ணகி' படம் எப்படி இருக்கு?