ALP Music logo: இசையோடு ஃபேஷனையும் ஒன்றிணைத்து புதிய பரிமாணம்.. ஆல்ப் மியூசிக் லோகோ வெளியீடு

சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆல்ப் மியூசிக் லோகோவை அந்நிறுவன சி.இ.ஓ  ஜஸ்டின் மற்றும் சி.ஓ.ஓ. மால்கம் ஆகியோர் வெளியிட்டனர்.

Continues below advertisement

சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆல்ப் மியூசிக் லோகோவை அந்நிறுவன சி.இ.ஓ  ஜஸ்டின் மற்றும் சி.ஓ.ஓ. மால்கம் ஆகியோர் வெளியிட்டனர்.

Continues below advertisement

இசைத் துறையில் தடம் பதிக்கும் விதமாக ஒரு மாபெரும் கொண்டாட்டத்தை அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜஸ்டின் சாமுவேல் ஜேம்ஸ் மற்றும்  தலைமை செயல்பாட்டு அதிகாரி மால்கம் ஆகியோர் சோழிங்கநல்லூரில் உள்ள இல்லம் ஹாஸ்பிடாலிடி விடுதியில் வெகு சிறப்பாக நடத்தினர்.

இசையோடு ஃபேஷனையும் ஒன்றிணைத்து, 1950 முதல் தற்போது வரையிலான பரிணாமத்தை வெளிப்படுத்தியது இந்நிகழ்ச்சி.

ஆல்ப் மியூசிக் லோகோ வெளியீட்டு நிகழ்வு அதிநவீன தொழில்நுட்ப வடிவமைப்பில் வண்ணங்கள் நிறைந்த நிகழ்ச்சியாக இருந்தது. ஆல்ப் மியூசிக் ஒரு கலாச்சார இயக்கமாக செயல்படுவதால் 
புதிய லோகோ வெளியீடு பிராண்டிற்கான ஒரு அற்புதமான புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அதை அப்படியே பிரதிபலித்தது இந்நிகழ்ச்சி.

காலந்தோறும் மாற்றங்களை சந்தித்த இசையோடு ஆடைகளின் மாற்றத்தையும் கண்முன் நிறுத்தி, இறுதியாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் தீம் கொண்டு நிறைவு பெற்றது இந்த கொண்டாட்டம். 

சர்வதேச இசைப்பிரபலம் ஒலிவியா பார்வையாளர்களை மயக்கும் நிகழ்ச்சியுடன் மேடையை அலங்கரித்தார்.  டார்க்கின் உற்சாகமூட்டும் கன்னட ராப்-பாப் நிகழ்ச்சி மாலைப் பொழுதை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றது.  

ஃபேஷன், இசை மற்றும் பண்டிகை நேர்த்தியுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,   ஆல்ப் மியூசிக் ஒரு பிராண்ட் மட்டுமல்ல என்றும் இது இரு கலைவடிவங்களின் நீடித்த மரபிற்கான சான்று என்றும் ஜஸ்டின் மற்றும் மால்கம் ஆகியோர் தெரிவித்தனர். 

மேலும் இந்த ஆல்ப் மியூசிக் நிறுவனம் இசைத்துறையில் சிறந்து விளங்கும் தனி நபர்களை பிரபலப் படுத்தவும், அவர்களின் அடுத்த கட்ட நகர்வுகளுக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் தங்களுக்கான தனிப்பதையை இசைக்கலைஞர்கள் உருவாக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். எந்த ஒரு கலைஞரும் ஆல்ப் மியூசிக் தளத்தை எளிதில் அணுக முடியும் என்றும், இசை ஆல்பம் அவர்களிடம் இருந்தால் வீடியோ உருவாக்கி தர உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னை போன்ற நகரங்களில் இருக்கும் எண்ணற்ற திறமையாளர்களுக்கு இது கதவுகளை திறந்து விடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்

Continues below advertisement