காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை குறைப்பதற்காக உடனடியாக காலநிலை அவசர நிலையை பிரகன படுத்தவேண்டும், என பாட்டாளி மக்கள் கட்சியின் துணை அமைப்பான பசுமை தாயகம் நீண்ட நாளாக கோரிக்கை வைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்களை சந்தித்து காலநிலை அவசர நிலை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை பசுமைத்தாயகம் அமைப்பு ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை அடுத்த தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில், பசுமை தாயகம் மற்றும் அரிமா சங்கம் சார்பில் கால்நிலை அவசர பிரகடனம் மற்றும் சுற்றுழல் பாதுகாப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி , முன்னாள் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் குணராஜா மற்றும் தமிழ் மருத்துவ கழகம் தலைவர் மருத்துவர் வேலாயுதம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அப்போது கல்லூரி மாணவர்களுக்கு புங்கை வேம்பு மருதம் நெல்லி போன்ற மருத்துவ குனம் வாய்ந்த மரக்கன்றுகளை வழங்கிய சௌமியா அன்புமனி பசுமையை பாதுகாப்போம் என மானவர்களை உறுதிமொழி ஏற்க வைத்தார். அதனை தொடர்ந்து காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள அவசர நிலை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மாணவர்களுக்கு கானொலி விளக்கம் அளிக்கபட்டது. பின்னர் மாணவர்களுடன் சேர்ந்து கல்லூரி வளாகத்தில் பல்வேறு மரக்கன்றுகளை அவர் நட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவிலேயே பெரிய சதுப்பு நிலமான 5500 ஹெக்டேர் பரப்பிலான பள்ளிகரனை சதுப்புநிலம் தற்போது 500 ஹெக்டேராக சுருங்கியுள்ளதாகவும், காலநிலை மாற்றம் புவி வெப்பமயமாதல், ஆகியவை பேராபத்தை விளைவிக்க போவதாலும் பசுமையை பாதுகாப்பது முக்கியம் என்றார்.
மேலும் மாணவர்கள் எந்த தவறான பழக்கங்களுக்கும் அடிமையாகாமல் ஆரோக்யத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்றும் பெண்கள் தங்கள் பாதுகாப்பை எப்போதும் உறுதி செய்து கொள்ளவேண்டும், சமூக வலைதளங்களில் தேவையற்ற பதிவுகளையோ தங்களின் தனிபட்ட புகைபடங்களையோ வெளியிட்டு ஆபத்துகளில் சிக்காமல் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்றும், சமூகத்தில் அச்சுறுத்தல்கள் ஏதேனும் ஏற்பட்டால் தயங்காமல் பெற்றோர்களிடம் தெரியபடுத்த வேண்டும் பெண்கள் என்றும் கேட்டுகொண்டார்.
மேலும் புவி வெப்பமயமாதலை தடுக்க செல்லும் இடமெல்லாம் மாணவர்கள் மரகன்றுகளை நட்டு பசுமையை பாதுகாக்க வேண்டும் என கேட்டுகொண்டார். இந்நிகழ்ச்சியில் பசுமைதாயகம் செயலாளர் அருள், மாநில துனை செயலாளர் ஐநா.கண்ணன், அரிமா சங்கம் முக்கிய பொருப்பாளர்கள் ரமா ரவி, யாமினி பிரியா, அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்