சென்னையில் புறநகர் பகுதியாக இருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில, மல்ராசாபுரம் ஆகிய பகுதியில் 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர்  பகுதியில் இயங்கி வரும் நிறுவனத்தில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஊழியர்களை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.





செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் அருகே டேஜுங் மோபட்ட என்ற நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. என் நிலையில் இந்த நிறுவனத்தில் ஆர்கே ஷர்மா என்பவர் எம்டியாக பணியாற்றி வந்துள்ளார். ஆர்கே ஷர்மா இந்த நிறுவனத்தில் சில முறைகேடு சம்பவத்தில் ஈடுபட்டதாக புகாரின் அடிப்படையில் கடந்த, 06.8.22 அவர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இந்த செயல்பட்டு வரும்  உரிமையாளர்கள் இருவருடன் இணைந்து, நிறுவனம் 10 வருடங்களுக்கு லீஸ் எடுத்துள்ளது. தற்பொழுது வாடகை இடத்தில் இந்த நிறுவனம் இயங்கி வரும் நிலையில் இந்த சம்பவம் நடைபெற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 



குறிப்பாக சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் வீடியோவில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா உரிமையில் பேசி இந்த நிறுவனத்தை இழுத்து மூடி விடுவோம் என கூறுகிறார். மற்றொரு நபர் இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபடும் பொழுது மிகவும் ஒருமையில் பேசி தகாத வார்த்தையில் அந்த நம்பரை திட்டுகிறார். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் புகார் அளிக்கப்படும் எனக் கூறியதும் கோபமடைந்த எஸ் ஆர் ராஜா மேலும் அவரை திட்டி அங்கிருந்து செல்ல முற்படுகிறார். அப்பொழுது எதிரி நம்பர் நான் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஓட்டு போட்டவன் எனக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என பேசும் வீடியோக்கள் இன்று சமூக வலைத்தளம் முழுவதும் வைரலாக பரவியது.

 

இதுகுறித்து நிறுவனத்தின் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், எங்கள் நிறுவனத்தில் முன்னாள் எம் டி ஆர் கே சர்மா ஊழல் புகார் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் சுமார் 230 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் ராஜா தொலைபேசி வாயிலாக எங்களுக்கு மிரட்டல் கொடுத்தார். இந்நிலையில் இன்று திடீரென நிறுவனத்துக்குள் நுழைந்து ,எங்களை மிரட்டி உள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலர் அன்பு அவர்களிடம் இணையதளம் வாயிலாக புகார் அளித்துள்ளோம் என தெரிவித்தார்.

 



இது குறித்து தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கூறுகையில், ”நண்பர் தனது இடத்தில் பிரச்சனை உள்ளதாக அழைத்துச் சென்றார். உரிமையாளராக இருக்கும் என் நண்பருக்கு அங்கு வாடகைக்கு இருக்கும் நபர்கள் வழி விடுவதில்லை” எனவே அதுகுறித்து விசாரிப்பதற்காகவே நான் அங்கு சென்றேன் என விளக்கம் அளித்துள்ளார்.