சென்னை : பள்ளி மாணவி உயிரிழப்பு , இளைஞரின் கால் துண்டானது ! அதிர்ச்சி தரும் விபத்து
சென்னை பெரம்பூரில் ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவி ,சென்டர் மீடியன் மீது மோதி உயிரிழப்பு.

ஆண் நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவி உயிரிழப்பு , இளைஞரின் கால் துண்டானது..
சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையைச் சேர்ந்தவர் அசோக் வயது ( வயது 19 ) மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு அயனாவத்தைச் சேர்ந்த பிளஸ் டூ படிக்கும் 16 வயது மாணவி ரக்சித்தா சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி உள்ளார். பின்னர் இருவரும் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் , அயனாவரத்தில் இருந்து மாணவியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு முரசொலி மாறன் பாலம் வழியாக ஜமாலயா நோக்கி கீழே இறங்கி செல்லும் போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியன் மீது வேகமாக மோதியது.
இதில் வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரக்சித்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அசோக் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் காலில் படுகாயம் ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சித்தப்பா மகளுடன் பைக்கில் சென்ற மெக்கானிக் சென்டர் மீடியனில் மோதி பலி
சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் இக்ரம் உசேன் ( வயது 21 ) இவர் தந்தை புதுப்பேட்டையில் வைத்து இருக்கும் ஹாரன் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் கடையில் பணி புரிந்து வந்தார். இக்ரம் உசேன் தனது சித்தப்பா மகள் அஜீரா தபசுவை அவரது வீட்டில் விடுவதற்காக தனது டியூக் இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செங்கை சிவம் மேம்பாலம் வழியாக ஜமாலயா நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராவிதமாக அவரது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதியது. இதில் இருவரும் தூக்கி விசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த இக்ரம் உசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த அஜீரா தபசு உள்காயத்துடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து புளியந்தோ ப்பு போக்குவரத்து புலனா ய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





















