தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அல்லது ஆவின் (Tamil Nadu Co-operative Milk Producers' Federation Limited-AAVIN) என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் பாலை மதிப்புக் கூட்டி விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஆவின் பால்பாக்கெட்டில் பல்லி கிடந்த வீடியோ ஒன்றை நுகர்வோர் சமூக வலைதளத்தில் பகிந்துள்ளது வைரல் ஆகி வருகிறது.
ஆவின் சார்பில், தூய மாட்டுப் பால், கோல்டு, எஸ்.எம்., - நிலைப்படுத்தப்பட்ட பால், டீ மேட் உட்பட ஐந்து வகை பால் பாக்கெட்டுகள் நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சத்திற்கும் மேல் தயாரிக்கப்படுகின்றன. சென்னை அருகே உள்ள பள்ளிக்கரணையில் வசிப்பவர் ஒருவர் ஆவின் பால் பாக்கெட் வாங்கியுள்ளார். அதில், இறந்து கிடந்த பல்லி ஒன்று இருந்ததை கடந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் தளத்தில் பல்லி இருந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இது டிவிட்டரில் வைரல் ஆகிவருகிறது.
நுகவோர் பால் பாக்கெட்டை கடையில் ஒப்படைத்துள்ளார். மேலும், தொழிற்சாலையில் உள்ள பாலிலும் பல்லி விழுந்து விஷத்தன்மையாகிவிட்டதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
ஆனால், ஆவின் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ஆவின் பாக்கெட்டில் இவ்வளவு பெரிய அளவிலான உயிரினம் உள்ளே செல்வதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளது.
இதேபோல, மதுரையில் கடந்த வாரம் ஆவின் பால் பாக்கெடில் ஈ இறந்து கிடந்தது.
மதுரை நுகர்வோர் உடன் டெப்போவில் திருப்பி ஒப்படைத்தார். இத்தகவல் அறிந்து டெப்போவிற்கு சென்ற ஆவின் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தற்போது அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது குறித்து விளக்கமளித்த ஆவின் நிர்வாகம் பேக்கிங் செய்யும் தவறு நடந்திருக்கலாம் எனவும் பணியில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பால் பை நிரப்பும் பிரிவில் பணியாற்ற கான்ட்ராக்ட் பெற்ற பெங்களூரு தனியார் பேக்கிங் நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், அப்பிரிவின் துணை மேலாளர் சிங்காரவேலனை 'சஸ்பெண்ட்' செய்தும் ஆவின் பொதுமேலாளர் சாந்தி உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஆவின் பாலில் பல்லி விழுந்த சர்ச்சைக்கு ஆவின் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆவினின் ரூ.22 மதிப்புள்ள அரை லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்டில் இறந்த பல்லி இருந்ததாகவும், இதுபோன்று கவனக்குறைவாக இருக்க கூடாது என்றும் நுகர்வோர் கோரிக்கை வைத்துள்ளனர்.