தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சற்று முன்தினம் திடீரென சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. ராயப்பேட்டை, வடபழனி, அண்ணாசாலை, கொளத்தூர், மேடவாக்கம், கிண்டி, அண்ணாநகர், கோயம்பேடு, ஆலந்தூர், அமைந்தகரை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. 


தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் மழை நீர் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் மழை பெய்து வந்தபோதிலும், சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. கடந்த சில வாரங்களாகவே சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.


இன்று காலை முதல் வெயில் சென்னையில் கடுமையாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில், சென்னையில் இன்று இரவு சட்டென்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த சூழலில், இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர், அதே சமயம், திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.


தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நாளை முதல் 22-ந் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.   சென்னையில் இந்தாண்டு தொடக்கம் முதல் ஓரளவு நல்ல மழை பெய்து வருவதால், சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் நீர்நிலைகளில் நீர்மட்டம் போதிய அளவில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க : அரக்கோணம் முதல் அச்சரப்பாக்கம் வரை விரிவடைகிறதா சென்னை மாநகரம்..? அமைச்சர் சொன்ன தகவல்!


மேலும் படிக்க : பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அரசு இரட்டைக் கொள்கையை கையாளுகிறதா..? - திருமாவளவன்