சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அடுத்த 24 மணி நேரத்தில் தென் கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும், இன்று அந்தமான் கடல் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாளை (நவ.17) மற்றும் நாளை மறுநாள் (நவ.18) தென் கிழக்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.


நவம்பர் 18ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென் மேற்கு - மத்திய மேற்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.


நவ.19, 20: தமிழ்நாடு, தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர கடலோரம் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். மேற்கூறிய பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவான பிறகு மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 18 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக 20 ஆம் தேதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.


மேலும் கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,  இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 


18.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 


19.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 


20.11.2022: கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):


ராஜபாளையம் (விருதுநகர்) 12, ஆயிக்குடி (தென்காசி) 9, சிவகிரி (தென்காசி) 7, கருப்பாநதி அணை (தென்காசி) 6, தென்காசி, வத்திராயிருப்பு (விருதுநகர்) தலா 5, செங்கோட்டை (தென்காசி), பாபநாசம் (திருநெல்வேலி), நாகுடி (புதுக்கோட்டை), பிலவாக்கல் (விருதுநகர்), கழுகுமலை (தூத்துக்குடி) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.   


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


இன்று அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி  காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல்  மற்றும் அதனை ஒட்டியுள்ள   அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவாகக்கூடும், இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு  திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல்  பகுதிகளில்  வலுபெறக்கூடும்.


16.11.2022: அந்தமான் கடல்  பகுதிகள் மற்றும்  அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


17.11.2022:  தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


18.11.2022: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும்  அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


19.11.2022 மற்றும் 20.11.2022: தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்  பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.