Chennai Power Shutdown: சென்னையில் மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு சீரான மின்சாரத்தை வழங்குவதை உறுதி செய்வதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகிறது.
சென்னையில் நாளைய மின்தடை: 04.07.2025
இந்நிலையில், நாளை(04.07.2025) சென்னையில் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகளுக்கா வியாழக்கிழமை (04.07.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்
காந்தி நகர்: கால்வாய் பங்க் சாலை, காந்தி நகர் 4வது பிரதான சாலை, காந்தி நகர் குறுக்குத் தெரு, 2வது கால்வாய் குறுக்குத் தெரு, 3வது கால்வாய் குறுக்குத் தெரு.
பெசன்ட் நகர்: பெசன்ட் நகர் 2வது பிரதான சாலை, 16வது குறுக்குத் தெரு முதல் 25வது குறுக்குத் தெரு வரை, பெசன்ட் நகர் 3வது பிரதான சாலை, CPWD வீட்டுவசதி (புதியது), 6வது அவென்யூ பெசன்ட் நகர், ஓடைக்குப்பம் பகுதி, திதிர் நகர் பகுதி.
கொட்டிவாக்கம்: புதிய கடற்கரை சாலை, புதிய கடற்கரை சாலை விரிவாக்கம், சிட்ரஸ் ஓட்டல், திருவள்ளுவர் நகர் 2வது பிரதான சாலை, திருவள்ளுவர் நகர் 7வது பிரதான சாலை, 36வது குறுக்குத் தெரு, 58வது குறுக்குத் தெரு, 59வது குறுக்குத் தெரு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் தெரு
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிவிப்பையடுத்து, சென்னையில் மேற்கண்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மின்தடைக்கு ஏற்றார்போல் தங்கள் வேலைகளை திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.