சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், அக்டோபர் 31-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

புளியந்தோப்பு

சைடன்ஹாம்ஸ் ரோடு, கண்ணப்பர் திடல், ரிப்பன் பில்டிங், பெரியமேடு, சுந்தராபுரம், நேரு டிம்பர் மார்ட், அப்பா ராவ் கார்டன், டிமெல்லோஸ் ரோடு, வஉசி நகர், அம்பேத்கர் நகர், அம்மையம்மாள் தெரு, குட்டிதம்புரான் தெரு, கன்னிகாபுரம், காந்தி நகர், பவுடர் மில்ஸ் தெரு, சத்தியவாணி முத்து நகர், வீராசாம தெரு, பார்த்தசாரதி தெரு, நாச்சியாரம்மாள் சந்து, திரு.வி.க. நகர், பதீசன் புரம், அம்பேத்கர் நகர், மன்னார்சாமி தெரு, ராமசாமி தெரு, திருவேங்கடசாமி தெரு, புளியந்தோப்பு ஹை ரோடு, ஜாபர்கான் தெரு, போல்நாயக்கன் தெரு, நாச்சரம்மாள் தெரு, மன்னார்சாமி தெரு, நாராயணசாமி தெரு, டிகாஸ்டர் தெரு, சூளை மோதிலால் அண்ணல் தெரு, காட்டூர் நல்ல முத்து தெரு, அங்காளம்மன் கோவில் தெரு, அஸ்தபுஜம் சாலை, சூளை பெரியார் நகர், பார்த்தசாரதி தெரு, முனுசாமி நகர், ஆவடி ஸ்ரீனிவாசன் தெரு, கே.எம்.கார்டன், சுப்பநாயுடு தெரு, ஜி.வி.கோயில் தெரு.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.