சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(01.08.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஆகஸ்ட் 1-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம்
ஜிஇ கம்பெனி, மிலிட்டரி குவார்ட்டர்ஸ், ஏர் இந்தியா, டிஆர்டிஓ, தாஜ் ஃப்ளைட் கிச்சன், பிபிசிஎல், எல்&டி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பம்மல், காமராஜபுரம் திருநீர்மலை மெயின் ரோடு, எல்ஐசி காலனி எக்ஸ்ட்ன், ராஜீவ் காந்தி நகர், விக்டோரியா தெரு, பெரியார் தெரு, நியூஸ்மேன் தெரு, மரியன்னை நகர், இபி நகர், அம்னை மேரிஸ் தெரு அடுக்குமாடி குடியிருப்புகள், திருவள்ளுவர் பிரதான சாலை, பக்தவஹலம் தெரு 1-வது, 3-வது தெரு.
மாங்காடு
அம்பாள் நகர், பத்மாவதி நகர், அடிசன் நகர், மணலி ராமகிருஷ்ணா நகர், பாலாஜி அவென்யூ, எஸ்.எஸ்.கோயில் தெரு, மேலண்டை மாட வீதி, பெருமாள் கோவில் தெரு, பள்ளி தெரு, நரிவன சாலை, புதிய காவல் நிலையம், எம்.ஜி.ஆர்.நகர். ஏ.எஸ்.நகர் பட்டூர், அப்பாவு நகர், வல்லீஸ்வரன் நகர், சரஸ்வதி நகர், பாண்டியன் நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, ராமகிருஷ்ணா புரம், மாரியம்மன் கோவில் தெரு.
மாடம்பாக்கம்
ராஜ்பாரீஸ் பிளாட்ஸ், மாம்பாக்கம் மெயின் ரோடு, ராகேஷ் சர்மா நகர், விக்டோரியா பண்ணை வீடு, கோவிலஞ்சேரி, க்ரஞ்ச் அண்ட் கறி, குறிஞ்சி நகர், அகரம் தென், துரைபதி அம்மன் கோவில் தெரு, ஜி.கே.அவென்யூ.
பள்ளிக்கரணை
காமகோடி நகர், ஐஐடி காலனி, நாகம்மாள் அவென்யூ, விஜிபி ராஜேஷ் நகர், மா.பொ.சி. நகர், என்ஐஓடி.
திருசூலம்
பிவிஆர் மால், சாந்தை ரோடு, அருமலை சாவடி, ஹார்பர் ஆர்டர்ஸ், முக்கண்ணி அம்மன் கோயில் தெரு, ராணி அண்ணாநகர், கென்னடி வெளி, மூவரசன்பேட்டை மெயின் ரோடு.
சீதளபாக்கம்
வரதராஜப் பெருமாள் கோயில் தெரு, ஏடிபி அவென்யூ, வேங்கைவாசல் மெயின் ரோடு, பிஎஸ்சிபிஎல், பொலினேனி ஹில் சைட் அபார்ட்மெண்ட், டிஎன்எச்பி காலனி, வெண்பா அவென்யூ, கன்னிகோயில் தெரு, எம்ஜிஆர்நகர், பாசில் அவென்யூ, விவேகானந்தா நகர், நூக்கம்பாளையம் சாலை, விவேகானந்தா நகர், ஜெயா நகர், வள்ளுவர் நகர், காந்தி நகர், ஒட்டியம்பாக்கம் அரசன்காலனி மெயின் ரோடு, காரணை மெயின் ரோடு, சங்கராபுரம், நாகலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், ஜோன்ஸ் காசியா, நேசமணி நகர் மல்லேஸ், கே.ஜி. அபார்ட்மென்ட் நூக்கம்பாளையம் ரோடு, ஆர்சி புளூசம் அபார்ட்மென்ட், நேசமணி நகர், வரதபுரம், ஏரிக்கரை ரோடு.
வேளச்சேரி
பேபி நகர், தரமணி 100 அடி மெயின் ரோடு, விஜயா நகர், பார்க் அவென்யூ, டாஸ் அவென்யூ, ராமகிரி நகர்.
பூந்தமல்லி
இது தவிர, அத்தியாவசிய மற்றும் அவசரகால பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பூந்தமல்லி பகுதியில் மின் தடை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படடுள்ளது.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
