Chennai Peripheral Ring Road Update: சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு (CPRR) சென்னையின் முக்கிய பகுதிகள் மற்றும் தொழிற்சாலை பகுதிகளை இணைக்கிறது, ரூபாய் 12,301 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள, இந்த சாலை தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Chennai Peripheral Ring Road project - சென்னை எல்லை சாலை திட்டம்
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர, சென்னை வெளிவட்டச் சாலைகள் அமைக்கப்பட்டன. அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்தை கருத்தில் கொண்டு தற்போது, "சென்னை எல்லைச்சாலை" அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சாலை மகாபலிபுரம் பூஞ்சேரி முதல் எண்ணூர் துறைமுகம் வரை அமைய உள்ளது. இந்த சாலை 132.87 கிலோமீட்டர் தூரத்திற்கு பத்து வழிச்சாலையாக அமைய உள்ளது. ஆறு வழி எக்ஸ்பிரஸ் சாலையாகவும், இரு புறங்களில் இரண்டு வழி சர்வீஸ் சாலை அமைய உள்ளது. இந்த சாலை பயன்பாட்டிற்கு வரும்போது, சென்னை மற்றும் சென்னை புறநகரில் பெரும் அளவில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமை அடையும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு துறை சார்பில் இந்த சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை மொத்தம் மூன்று பகுதிகளாக அமைய உள்ளன. இந்த சாலையில் வாகனங்கள் 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த சாலை மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களுக்கு எளிதாக செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இணைக்கும் முக்கிய சாலைகள் என்னென்ன? Chennai Peripheral Ring Road Route Map
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை (NH32). ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலை (NH48) மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் தேசிய நெடுஞ்சாலை. திருவள்ளூர் புறவழிச் சாலை (NH716) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கிறது. திருவள்ளூர் பைபாஸ் சாலை முதல் தச்சூர் (NH16). தச்சூர் முதல் எண்ணூர் துறைமுகம் வரை சாலை அமைய உள்ளது.
இதன் மூலம் சிங்கப்பெருமாள் கோயில், காட்டுப்பள்ளி, புதுவயல், பெரியபாளையம், தாமரைப்பாக்கம், திருவள்ளூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய முக்கிய பகுதிகள் இந்த சாலை மூலம் இணைய உள்ளன. அதேபோன்று இந்த சாலை முழுமை அடைந்த பிறகு முக்கிய தேசிய சாலைகளை எளிதாக இணைக்க முடியும். சென்னை தடா தேசிய நெடுஞ்சாலை, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தவிர கிழக்கு கடற்கரை சாலையின் இதன் மூலம் இணைக்கப்பட உள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன? Advantages of Chennai Peripheral Ring Road ?
இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் சென்னை புறநகர் மிகவும் மேம்படுத்தப்பட்ட சாலையாக இது இருக்கும். 6 வழிச்சாலை எக்ஸ்பிரஸ் சாலையாகவும், மீதமுள்ள நான்கு வழிச்சாலை உள்ளூர் மக்கள் பயன்படுத்தக்கூடிய, சர்வீஸ் சாலையாக உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்த எளிதாக இருக்கும்.
பல்வேறு மாநிலங்களுக்கு செல்லவும் இந்த சாலை பயனாக இருக்கும் (இதன் மூலம் பெங்களூர் எக்ஸ்பிரஸ் ஹைவே மற்றும் சித்தூர் தச்சூர் எக்ஸ்பிரஸ் ஹைவே ஆகியவற்றை எளிதாக அடைய முடியும்). 120 கிலோமீட்டர் வேகத்தில் வேகமாக வாகனங்களை மிகவும் பாதுகாப்பாக, இந்த சாலையில் இயக்க முடியும். இதன் மூலம் சென்னை புறநகர் பகுதியில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையுள்ளது. இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் தொழிற்சாலைகளுக்கு, பொருட்களை ஏற்றி செல்லவும் தொழிற்சாலையில் இருந்து பொருட்களைக் கொண்டு வரவும் எளிதாக இருக்கும். இதன் மூலம் பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை பெரும்.
எந்த நிலையில் உள்ளது பணிகள்? - Chennai Peripheral Ring Road Route Wise Status
சிங்கப்பெருமாள் கோயில் முதல் பூஞ்சேரி வரை
சுமார் 27 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைய உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு இந்த பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கப்பெருமாள் கோயில் வரை
கிட்டத்தட்ட இந்த பணிகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளன. சுமார் 24 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைய உள்ள இந்த சாலை 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை
சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைய உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
தச்சூர் முதல் திருவள்ளூர் புறவழிச் சாலை வரை
சுமார் 26 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைய உள்ளது இதற்கான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன
எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரை
சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைய உள்ள இந்த சாலை டாட்டா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் சாலையின் ஒரு பகுதியை கட்டமைத்து வருகிறது. ஒரு சில நிர்வாக காரணங்களால் சாலை அமைக்கும் பணி சற்று தாமதமாக நடைபெற்று வருகிறது.
பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக இந்த சாலை அமைக்கும் பணி நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.